திருச்சி:
சுவாதியை கொலை செய்த ராம்குமாருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என சுவாதி சித்தப்பா தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:
“சுவாதி கொலையை தொடர்ந்து, தங்களை சந்தித்து ஆறுதல் கூறிய, மகளிர் அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் மற்றும் பொது மக்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறோம். தேசிய மகளிர் பாதுகாப்புக்கு சுவாதியை தியாகம் செய்து விட்டதாக நினைத்துக்கொள்கிறோம். பள்ளி கல்லூரிகளில் நீதிபோதனை வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். சுவாதியை கொலை செய்த நபருக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும்”- இவ்வாறு அவர் தெரிவித்தார்.