சென்னை:
கொலை செய்யப்பட்ட சுவாதிக்கு நுங்கம்பாக்கம் ரயில்வே நிலையம் அருகே இந்திய ஜனநாயக மாதர் சங்கம்  உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் அஞ்சலி செலுத்தின.
கடந்த வெள்ளிக்கிழமை சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இளம்பெண் சுவாதி படுகொலை செய்யப்பட்டது, கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில்  இன்று மாலை, நுங்கம்பாக்கம் ரயில்நிலையம் அருகில் உள்ள  செளராஸ்ட்ரா முதல் தெருவில் சுவாதிக்கு பல்வேறு அமைப்புகள் அஞ்சலி செலுத்தினர்.
IMG-20160628-WA0024
இந்த நிகழ்வில் அனைத்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உழைக்கும் பெண்கள் ஒருக்கிணைப்புக் குழு,  இந்திய ஜனநாயக மாதர் சங்கம்  உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
பின்னர் பேசிய அனைத்து இந்தியா மாதர் சங்க து.தலைவர் வாசுகி பேசியபோது, “ தமிழக அரசு முழு பூசுணைக்காய் சோட்ரில் மறைக்க பார்கிறது மேலும் தமிழக அரசு குற்றத்தை ஒற்றுகொண்டு பெண்கள் பாதுகாப்பை எற்படுத்த வேண்டும்” என்றார்.