அமெரிக்கா: கோபா அமெரிக்கா கால்பந்துப் போட்டியில், கொலம்பியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு நடப்பு சாம்பியனான சிலி தகுதி பெற்றது.
அமெரிக்காவில் நடந்து வரும் கோபா அமெரிக்கா கோப்பை கால்பந்து தொடரின், நேற்றைய இரண்டாவது அரையிறுதிப் போட்டியில், தரவரிசையில் மூன்றாவது இடத்தில் இருக்கும் கொலம்பிய அணியும், ஐந்தாவது இடத்தில் இருக்கும் சிலி அணியும் மோதின.
2928
விறுவிறுப்பான இந்த ஆட்டத்தின் ஏழாவது நிமிடத்திலேயே சிலி அணி முதல் கோலை அடித்தது. அடுத்த நான்காவது நிமிடம், 2-வது கோலை அந்த அணி அடித்தது. இதன் மூலம் 2 -0 என்ற கணக்கில் சிலி முன்னிலை வகித்தது.
4480
ஆட்டத்தை சமன்படுத்த கொலம்பிய அணி கடுமையாக போராடியது. ஆனால் இறுதி வரை அந்த அணியால் கோல் அடிக்க முடியவில்லை. ஆட்ட நேர முடிவில் சிலி அணி 2-0 என்ற கோல்கள் கணக்கில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் அந்த அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இதுவரை கோபா அமெரிக்கா போட்டியில் சிலியும், கொலம்பியாவும் 11 முறை மோதியுள்ளன. இதில், 2 ஆட்டங்களில் கொலம்பியாவும், 6 ஆட்டங்களில் சிலியும் வெற்றி பெற்றுள்ளன.. 3 ஆட்டங்கள் டிராவில் முடிந்துள்ளன.
வரும் ஞாயிறன்று (26.06.2016) நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் சிலி அணி, அர்ஜெண்டினாவுடன் மோத இருக்கிறது