ஆர். சர்புதீன் (Shahjahan R) அவர்களின் முகநூல் பதிவு:

ஓர் அவசர எச்சரிக்கை.
பேஸ்புக் தவிர வாட்ஸ்அப் பயன்படுத்தும் நண்பர்களும் தயவுசெய்து வாசிக்கவும்.
சில நிமிடங்களுக்கு முன் தோழி ஒருவர் பதிவு எழுதியிருந்தார். அவருக்கு விபத்து ஏற்பட்டு விட்டதாகவும், கவலைக்கிடமாக இருப்பதாகவும் வாட்ஸ்அப்பிலும் பேஸ்புக்கிலும் செய்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன. அவற்றை நம்ப வேண்டாம் என்பதுதான் அந்தப் பதிவின் செய்தி.
அந்தப் பொய்யான செய்தியைப் பகிர்ந்தவர் பெயர், படங்களை மறைத்திருக்கிறேன்.
யாரோ விஷமக்காரர்கள் வேலை இது. திட்டமிட்டு விஷமத்தனமாக யாரோ ஆரம்பித்து வைக்க, ஏதோ பெரிய உதவி செய்வதாக நினைத்துக் கொள்ளும் அரைவேக்காடுகள் இதைத் தீயாய்ப் பரப்புகிறார்கள். இதுபோன்ற வேலைகள் எல்லாம் பெண்களுக்கு எதிராகவே நிகழ்கின்றன என்பதையும் கவனிக்க வேண்டும்
அரைவேக்காட்டுத்தனமாக கிடைத்த செய்தியை எல்லாம் பகிர்வது இந்த சமூக ஊடகங்களின் பயன்களைக் கெடுப்பது மட்டுமல்ல, சம்பந்தப்பட்ட பெண்களின் நிம்மதியையும் குலைக்கும் விஷயம்.
இதுபோன்ற செய்திகள் வரும்போது தயவுசெய்து பகிராதீர்கள். உங்கள் நண்பர்கள் யாராவது பகிர்ந்தால், அதன் உண்மைத் தன்மையை விசாரித்து சரிபாருங்கள். பகிரும் நண்பரிடம் கேள்வி கேட்டு, உண்மையல்லாத செய்தியாக இருந்தால் அதை நீக்கச் செய்யுங்கள்.
Patrikai.com official YouTube Channel