
ரஜினி ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருப்பது “கபாலி” வெளியீட்டுக்காகத்தான். மலேசிய டான் வரும் “கபாலி” ரஜினியை பார்க்க, ஒவ்வொரு ரசிகரும் துடித்துக்கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில், “கபாலி” துவங்கியது முதலே பலரது மனதிலும் இருந்த கேள்வி, “சீனியர் டைரக்டர்கள் எல்லாம் ரஜினி படத்தை இயக்க வரிசையில் நிற்கும் நிலையில், இரண்டே படங்களை இயக்கிய பா.ரஞ்சித்துக்கு எப்படி கபாலி வாய்ப்பு கிடைத்தது” என்பதுதான்.
அதற்கான விடையை இப்போது சொல்லிவிட்டார் ரஜினியின் மகள் ஐஸ்வர்யா.
“படத்தை இயக்க பல மூத்த இயக்குநர்கள் காத்துக் கொண்டிருக்க, இரண்டே படங்கள் இயக்கிய பா.ரஞ்சித் படத்தில் நடிக்க ரஜினி எப்படி சம்மதித்தார் என்று பலரது மனதையும் அரித்துக் கொண்டிருந்த கேள்விக்கு ரஜினியின் இளைய மகளான சவுந்தர்யா தற்போது பதில் அளித்துள்ளார்.
அவர், “நான் வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குனராக ‘கோவா’ படத்தில் பணியாற்றிக் கொண்டிருந்தபோது ரஞ்சித்தின் அறிமுகம் கிடைத்தது. அவருடைய முதல் படமான ‘அட்டக்கத்தி’யை நான் தயாரிக்கும் வாய்ப்பு வந்தது. ஆனால், ஒருசில காரணங்களால் அது நடக்கவில்லை.
பிறகு, ரஞ்சித்தின் ‘மெட்ராஸ்’ படம் வெளிவந்த பிறகு, அதை பார்த்துவிட்டு அப்பா ஒருநாள் என்னை அழைத்து ‘மெட்ராஸ்’ படம் மிகவும் நன்றாக உள்ளது என்றார்.
உடனே, எனக்கு “ரஞ்சித்தும், அப்பாவும் சேர்ந்து பணியாற்றினால் நன்றாக இருக்குமே” என்று தோன்றியது.
ரஞ்சித்தை சந்தித்து, “அப்பாவுக்காக ஒரு கதை உருவாக்க முடியுமா” என்று கேட்டேன். அவரால் நம்பவே முடியவில்லை. அப்படியே ஷாக் ஆகிவிட்டார்.
அடுத்த சில நாட்களில் என்னை சந்தித்த ரஞ்சித், “அப்பா நடிக்கும் படத்தில் அவர் ‘மலேசியா டானா’க வருகிறார்” என்றார்.
இதை அப்பாவிடம் போய் சொன்னேன். அவருக்கும் பிடித்திருந்தது. அதுதான் இன்றைய கபாலி” என்று சொல்கிறார் ஐஸ்வர்யா!
ஆக, கபாலி உருவாக காரணமானவர் ஐஸ்வர்யாதான்!
Patrikai.com official YouTube Channel