பத்திரிகையாளர் Pal Murukan A அவர்களின் முகநூல் பதிவு:

கேரள முதலமைச்சர் பதவி ஏற்ற ஒரு மாதத்தில் இரண்டாவது முறையாக டெல்லி வந்து சில அமைச்சர்களை சந்தித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். Kerala union of working journalists – Delhi chapter அந்த ‘நேருக்கு நேர்’ சந்திப்புக்கு ஏற்ப்பாடு செய்திருந்தது.
பதவி ஏற்ற இந்த ஒரு மாதத்தில் எத்தனை முறை செய்தியாளர்களை சந்தித்தார் என்று கேரள நண்பர்களிடம் கேட்டபோது, “5 வதோ, 6 வதோ முறை” என்றார்கள். பத்திரிக்கைகளுடன் சுமுக உறவு வைத்துக்கொள்ள media advisor (முன்னாள் கைரளி டி.வி.பத்திரிக்கையாளர்) ஒருவரையும் பிரணாய் நியமித்துள்ளார்.
அந்த ஒரு மணி நேர சந்திப்பின் போது, எந்த கூச்சலும், அடிதடியும் இல்லாத கேள்விகள்.. அமைதியான பதில்கள்.
இறுதியில் நன்றி சொன்ன நிர்வாகிகளுள் ஒருவர், “பத்திரிக்கை என்பது முக்கியமான அரசியல் சாசன அமைப்பு. அரசின் குறைகளை சுட்டிக்காட்டுவது மட்டுமல்லாமல், நிறைகளையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் பாலமாக இருப்போம்” என்றார்.
Patrikai.com official YouTube Channel