சிம்பு என்றாலே வம்புதான். காதல் டார்ச்சர், பீப் பாடல், படப்பிடிப்புக்கு வராதது, வந்தாலும் நடிக்காதது.. இப்படி சொல்லிக்கொண்ட போகலாம். ஆனால் பீப் பாடல் சர்ச்சையில் சிக்கிய பிறகு “நார்மல்” ஆனது போல காணப்பட்டார் சிம்பு.
அவர் நடித்து வருடக்கணக்காக ரிலீஸ் ஆகாமல் இருந்த “இது நம்ம ஆளு” படம் ரிலீஸ் ஆனது.
இதோ மீண்டும் தனது வம்பை துவக்கிவிட்டார்.
கவுதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் “அச்சம் என்பது மடமையடா” படத்தின் இறுதி நாள் ஷூட்டிங் இன்று காலை ஐந்து மணிக்கு என்று முடிவு செய்யப்பட்டிருந்தது. சென்னை பாலவாக்கம் அருகேதான் ஷூட்டிங் ஸ்பாட்.

இந்த படத்தின் தெலுங்கு பிதிப்பில் ஹீரோவாக நடிப்பவர் நாகார்ஜூனாவின் மகன் நாக சைதன்யா. இரு மொழிகளிலும் ஹீரோயின் மஞ்சிமா மோகன். இவர்களும் மற்ற நடிகர்களும் உரிய நேரத்துக்கு வந்துவிட்டார்கள். ஆகவே தெலுங்கு பதிப்பின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிட்டது.
ஆனால் சிம்பு வராததால், தமிழ்ப்படத்தின் படப்பிடிப்பு அந்தரத்தில் நிற்கிறது.
இயக்குநர் கவுதம் மேனன், ஏகடென்ஷனில் இருக்கிறார் சிம்பு மீது!
Patrikai.com official YouTube Channel