15-வது ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி பிரான்சில் நடைபெற்று வருகிறது.
செக் குடியரசு – ஸ்பெயின்
செக் குடியரசு, நடப்பு சாம்பியனான ஸ்பெயின் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தின. முதல் பாதியில் இரு தரப்பிலும் கோல்கள் அடிக்கப்படவில்லை. 87வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் இனியஸ்டா பாஸ் செய்த பந்தை, தலையால் முட்டி கோல் போட்டார் ஜெரார்ட் பிக் . இதனால் ஸ்பெயின் 1-0 என முன்னிலை பெற்றது. இதற்கு பதில் கோல் அடிக்கும் செக் குடியரசு வீரர்களின் முயற்சி பலிக்கவில்லை. இறுதியில் ஸ்பெயின் அணி வெற்றி பெற்றது.
இத்தாலி – பெல்ஜியம்
இத்தாலி – பெல்ஜியம் அணிகள்நேற்று நடந்த ஆட்டம் முதல் பாதி ஆட்டத்தின் முடிவில் இத்தாலி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. 2–வது பகுதி ஆட்டத்திலும் இதே நிலையே நீடித்தது. ஆட்டம் முடியும் தருவாயில் இத்தாலி 2–வது கோலை அடித்து மேலும் அதிர்ச்சி கொடுத்தது. 93–வது நிமி டத்தில் கிராசியானோ பெல்லே இந்த கோலை அடித்தார். முடிவில் இத்தாலி 2-0 என்ற கணக்கில் பெல்ஜியத்தை வீழ்த்தியது. பெல்ஜியம் உலக அணி வரிசையில் சென்ற ஆண்டு முதல் இடம் இருந்தது இந்த தோல்வி முகவும் ஒரு அதிர்ச்சியை ரசிகர்கள் கருதுகின்றனர்.
சுவீடன் – அயர்லாந்து குடியரசு இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ ஆனது.
இன்று இரவு ஆஸ்திரியா – ஹங்கேரி; போர்ச்சுகல் – ஐஸ்லாந்து ஆகிய அணிகள் மோதுகின்றனர். இதில் போர்ச்சுகல் – ஐஸ்லாந்து போட்டி ரசிகர்கள் மிகவும் எதிர் பார்க்கும் போட்டியாக இருக்கிறது.