சென்னை: கோடை விடுமுறையைக் கழிக்க அமெரிக்கா சென்றுள்ள நடிகர் ரஜினிகாந்த், அங்கு மருத்துவனையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும், அதனாலையே சொன்னபடி அவர் திரும்பவில்லை என்றும் கபாலி படத்தின் ஆடியோ ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில் “இந்த மாத இறுதியில் ரஜினி சென்னை திரும்புகிறார்” என்று கபாலி படத்தின் தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்துடன் அமெரிக்கா சென்றுள்ளார். கோடை விடுமுறையை கழிக்க அவர் சென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இடையில் அமெரிக்காவில் உள்ள ஒரு மருத்துவமனையில் ரஜினி சிகிச்சை பெறுவதாக தகவல் பரவியது.

இதனாலேயே அவர் குறிப்பிட்டபடி இந்தியா திரும்பவில்லை என்றும், அவரது வருகைக்காகவே கபாலி படத்தின் ஒலிநாடா வெளியீடு தள்ளிவைக்கப்பட்டதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் சொல்லப்பட்டன.
இதனால் ரசிகர்கள் மத்தியிலும், திரையுலகினர் மத்தியிலும் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கு பதில் அளிப்பது போன்று, ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா, ரஜினியுடன் எடுத்துக் கொண்ட செல்பி படத்தை ட்விட்டரில் வெளியிட்டு, அப்பாவுடன் அமெரிக்காவில் விடுமுறையை இனிமையாகக் கழிப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் ‘கபாலி’ பட தயாரிப்பாளர் எஸ்.தாணு ‘‘ரஜினிகாந்த் ‘2.0′ பட வேலையாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அவர் நலமுடன் இருக்கிறார். நேற்று முன்தினம் கூட என்னுடன் போனில் பேசினார். இரண்டு வாரத்தில் அவர் சென்னை திரும்புவார். கபாலி படத்தின் பாடல்களை இணையதளத்தில் நேரடியாக நாளை வெளியிடுகிறோம்,” என்று தெரிவித்தார்.
Patrikai.com official YouTube Channel