நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு அறிமுகம் தேவையில்லை. அமெரிக்க தொலைகாட்சியில் ஒளிபரப்பப்படும் பிரபல தொடரான Quantico-வின் கதாநாயகியான நடித்து உலகம் முழுதும் பிரபலமானவர்.
உலகின் செல்வாக்குள்ள பிரபலங்களின் வரிசையில் இவரும் உண்டு என்றது அமெரிக்காவில் இருந்து வெளிவரும் ‘டைம்ஸ்’ இதழ்.
வெள்ளை மாளிகையில் நடந்த மாலை நேர விருந்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா மற்றும் அவரது மனைவியுடன் கலந்துகொண்டவர்.
அப்படிப்பட்டவரையும் “மதவெறி” காயப்படுத்தியிருக்கிறது.
இவரது தந்தை வழி பாட்டி மேரி ஜான் அகவ்ரி சில தினங்களுக்கு முன் மறைந்தார். கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட அவர் பின்னாட்களில் மும்மையில் செட்டில் ஆகிவிட்டார். ஆனாலும் சிறுவயதில் தான் ஞானஸ்தானம் பெற்ற கேரளாவின் அட்டமங்கலத்தல் உள்ள செயின்ட் ஜான்ஸ் தேவாலயத்தை மறக்கவே இல்லை. தனது உடல் அங்குள்ள கல்லறையில் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்று விரும்பினார்.
அவரது கடைசி ஆசையை நிறைவேற்ற அவரது உடலுடன் செயின்ட் ஜோன்ஸ் தேவாலயத்துக்குச் சென்றது பிரியங்கா குடும்பம்.
ஆனால் மேரிஜான் உடலை அங்கு அடக்கம் செய்ய தேவாலய நிர்வாகம் மறுத்துவிட்டது.
“மேரி ஜான் ஒரு இந்துவை திருமணம் செய்து கொண்டு இந்துவாகவே வாழ்ந்தார். தவிர அவர் எப்போதும் இந்த தேவாலயம் பக்கமே வரவில்லை” என்று அதற்கு காரணமும் சொன்னது.
பிரியங்கா சோப்ராவும், அவரது குடும்பத்தினரும் எவ்வளவோ எடுத்துக்கூறியும் தேவாலய நிர்வாகம் இறங்கிவரவே இல்லை. வேறு வழியின்றி அருகில் உள்ள பொன்குன்னம் என்ற ஊரில் உள்ள தேவாலய கல்லறையில் பிரியங்கா சோப்ராவின் பாட்டி மேரி ஜான் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
“என் பாட்டியின் இறுதி ஆசையைக்கூட நிறைவேற்ற முடியாமல் போனது எனக்கு மிக மோசமான கழிவிரக்கத்தை ஏற்படுத்தி உள்ளது” என்று கண்ணீர் வடிக்கிறார் பிரியங்கா சோப்ரா.
“கடவுள்கள் நல்லவர்களோ கெட்டவர்களோ.. தெரியாது. ஆனஆல் அவர்கள் பெயரைச் சொல்லி இயங்குபவர்கள் பெரும்பாலும் நல்லவர்களாக இருப்பதில்லை” என்று சொல்லப்படுவது உண்டு. பிரியங்காவுக்கு நடந்ததைப் பார்க்கும்போது அது சரி என்றே தோன்றுகிறது.