”கண்ணா லட்டு திங்க ஆசையா” படம் மூலம் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் விசாகா சிங், திருமணம் செய்துகொள்ளப்போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இவர் நடித்த முதல் படம், “பிடிச்சிருக்கு” பெரிய அளவில் எடுபடவில்லை. அடுத்ததாக வெளியான “லட்டு” படம்தான் பெரும் வெற்றி பெற்றது. அதையடுத்து தொடர்ந்து “வாலிப ராஜா”, “ஒரு ஊர்ல ரெண்டு ராஜா” என்று பல படங்களில் ஒப்பந்தமானார். அவையும் கைகொடுக்கவில்லை.
ஆகவே தனது நீண்ட நாள் காதலரான விக்ராந்த் ராவ் என்பவரை விரைவில் திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்திருக்கிறாரராம் விசாகா. ஏர்லைன்ஸ் நிறுவனம் ஒன்றின் விளம்பரப்பிரிவு அதிகாரியாக பணி புரியும், விக்ராந்த் தற்போது பணி நிமித்தம் வெளிநாட்டில் இருக்கிறார்.
அவர் வந்த பிறகு திருமணம் நடக்குமாம்!
இதுபற்றி விசாகா கூறும்போது, “எங்கள் காதல் குழந்தை பருவத்தில் இருந்தே தொடங்கிவிட்டது. விக்ராந்த் மிகவும் அன்பானவர். அவரை காதலனாக அடைந்தது எனது அதிர்ஷ்டம்” என்கிறார் வெட்கத்துடன்.
வாழ்த்துகள் விசாகா!