kejriwal_12
arvind-kejriwal-wont-leave-delhi-cm-candidate-punjab-not-yet-decided-ashutosh
டில்லி முதல்வராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலை பஞ்சாப் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கும் திட்டம் இல்லை என ஆம் ஆத்மி  கட்சி  தெரிவித்துள்ளது.
பஞ்சாப் சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், “அங்கு ஆம்ஆத்மி கட்சிக்கு பரவலான ஆதரவு உள்ளது. ஆனால் அக் கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வர் வேட்பாளராக போட்டியிட்டால்தான் அக் கட்சிக்கு வெற்றி கிடைக்கும்” என்று சில கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன. இதையடுத்து கெஜ்ரிவால், தனது டில்லி முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பஞ்சாப் முதல்வர் வேட்பாளாராக போட்டியிடுவாரா என்ற கேள்வி எழுந்தது. இது குறித்து ஆம்ஆத்மி சார்பி்ல் எந்தவித கருத்தும்  வெளியிடப்படாமல் இருந்தது.
இது குறிதது நமது patrikai.com  இதழிலும் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் அசுதோஷ் “டில்லி முதல்வர் பதவியை கெஜ்ரிவால் ராஜினாமா செய்யும் பேச்சுக்கே இடமில்லை. டில்லியைத் தாண்டி வேறு மாநில பதவிகளுக்கு கெஜ்ரிவால் முன்னிறுத்தப்பட மாட்டார்”  என்றும் இன்று தெரிவித்தார்.
இதன் மூலம், “பஞ்சாப் மாநில முதல்வர் வேட்பாளராக கெஜ்ரிவால் முன்னிறுத்தப்படுவாரா” என்ற கேள்விக்கு விடை கிடைத்துள்ளது.