என். சொக்கன் அவர்களின் முகநூல் பதிவு
1

 பெங்களூரின் ட்யூஷன் மாஃபியாபற்றிச் சில விஷயங்கள் கேள்விப்பட்டேன். வாரத்தில் ஐந்து நாள் பள்ளி, இரண்டு நாள் (தலா 12 மணி நேரங்கள்) ட்யூஷன், ஒன்பதாம் வகுப்பிலேயே 12ம் வகுப்புப் பாடங்களைத் தொடங்கிவிடுதல், நாலு வருஷத்துக்கு ஃபீஸ் ஆறு லட்சம் (பள்ளிக் கட்டணம் தனி), பெரிய (உள்நாட்டு/வெளிநாட்டுக்) கல்லூரிகளில் இடம் நிச்சயம்.
ஆனால், நாலு வருடத்திற்கு ஓய்வின்றி வாரம் ஏழு நாளும் படித்தால் (ஏப்ரல், மே விடுமுறையாவது இருக்குமா?) அந்தப் பையன் என்ன ஆவானோ என்று நினைத்தால் வெளியாள் எனக்கே பெரும்பதற்றமாக இருக்கிறது, பெற்றோருக்குத் தோன்றாதோ!