somaliya
சோமாலியாவில் அல்- ஷபாப்  பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானோர்  எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது.
சோமாலிய தலைநகர் மொகாடிசுவில் பிரபல விடுதி ஒன்றின் முன்பாக கார் குண்டு வெடித்தது.  அந் நாட்டு  நாடாளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் அடிக்கடி  இந்த உணவகத்துக்கு வந்து உணவருந்தி செல்வார்கள். 
இந்த நிலையில், விடுதியின் நுழைவாயில்  இரண்டு குண்டுகள் வெடித்தன.  
இத்தாக்குதலில் 14 பேர் பலியானதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது,  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், காயமடைந்த 20 க்கும் மேற்பட்டவர்களுக்கு மருத்துவமனையில்  சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த குண்டு வெடிப்புக்கு அந்நாட்டில் செயல்படும் அல் ஷபாப் இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.