
சென்னை:
வழக்குரைஞர்கள் போராட்டத்தை தடுக்க புதிய சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. உயர்நீதிமன்ற சட்ட திருத்தம், அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
நீதிமன்ற வளாகத்துக்குள் வழக்குரைஞர்கள் போராட்டம் நடத்துவது தொடர்பாக சமீபத்தில் உயர்நீதிமன்றம் வந்த சட்ட திருத்தம் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
வழக்குரைஞர்கள் குற்றச்செயலில் ஈடுபட்டால், அந்தந்த நீதிபதியே வழக்குரைஞருக்கு தடை விதிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. நீதித்துறைக்கு எதிராக செயல்படும் வழக்குரைஞருக்கு தடை விதிக்கப்படும். நீதிமன்ற வளாகத்தில் போராட்டம், ஊர்வலம் நடத்தினால் வழக்குரைஞர் தொழில் செய்ய தடை விதிக்கப்படும். நீதிமன்ற ஆவணங்களை திருத்தினாலோ, நீதிபதி பெயருக்கு அவதூறு பரப்பினாலோ வழக்குரைஞராக பணியாற்ற தடை விதிக்கப்படும்.
நீதிபதியின் பெயரை பயன்படுத்தி பணம் வாங்கும் செயலில் ஈடுபட்டால், நீதிமன்றத்தில் மதுபானம் அருந்தி சென்றாலும் தடை விதிக்கப்படும். உயர்நீதிமன்றம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்களுக்கு இந்த அறிவிப்பு பொருந்தும்.
மாவட்ட நீதிமன்றங்களை பொறுத்த வரை முதன்மை நீதிபதிக்கு அறிக்கை அளித்து நடவடிக்கை எடுக்கலாம். உயர்நீதிமன்றத்துக்கு உள்ள அதிகாரத்தின்படி இந்த சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது” – இவ்வாறு அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Patrikai.com official YouTube Channel