சென்னை:
தமிழக முதல்வர் ஜெயலலிதாவும், 28 அமைச்சர்களும் இன்று பிற்பகல் பதவியேற்றனர். இந்த நிலையில் அமைச்சரவை 24 மணி நேரத்திற்குள் இன்று மீண்டும் விரிவாக்கம் விரிவாக்கம் செய்யப்பட்டது.
இன்று பதவியேற்ற அமைச்சர்கள் வசம் கூடுதலாக இருந்த துறைகள் பிரிக்கப்பட்டு புதிதாக நால்வருக்கு அளிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து ஜெயலலிதா அமைச்சரவையில் 32 அமைச்சர்கள் இடம்பெறுகின்றனர்.
15வது சட்டசபைக்கு நடந்த தேர்தலில் 134 தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றி பெற்றது. இதையடுத்து முதல்வர் ஜெயலலிதாவுடன், 28 பேர் அமைச்சர்கள் பதவியேற்கும் விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கத்தில் இன்று பகல் 12 மணிக்கு நடைபெற்றது.
ஜெயலலிதாவைத் தொடர்ந்து அமைச்சர்கள் ஒட்டுமொத்தமாக பதவியேற்றார்கள். முதலில் 14 அமைச்சர்கள் பதவியேற்றனர். அடுத்ததாக 14 அமைச்சர்கள் ஒட்டுமொத்தமாக பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டார்கள்.
பிறகு ஆளுநருடன் புதிய அமைச்சரவை குழு புகைப்படம் எடுத்துக் கொண்டது.
இதற்கிடையே மிழக அமைச்சரவையில் மேலும் நான்கு புதிய அமைச்சர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியானது. தொழிலாளர் நலத்துறை அமைச்சராக டாக்டர் நிலோஃபர் கபில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக சேவூர் எஸ். ராமச்சந்திரன், கால்நடைபராமரிப்புத்துறை அமைச்சராக பாலகிருஷ்ண ரெட்டி, தமிழக காதி, கிராம தொழில் துறை அமைச்சராக ஜி. பாஸ்கரன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அமைச்சர் ஆர். காமராஜ் வசம் கூடுதலாக இந்து சமய அறநிலையத்துறையும், அமைச்சர் செல்லூர் ராஜூ வசம் கூடுதலாக தொழிலாளர் நலத்துறையும், அமைச்சர் துரைக்கண்ணு வசம் கூடுதலாக கால்நடைத்துறையும் இருந்தது.
இவர்கள் வசமிருந்த துறைகள் தனியாக பிரிக்கப்பட்டு நான்கு புதிய அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவர்கள் நான்கு பேரும் நாளை மறுநாள் பதவியேற்க இருக்கறார்கள்.
ஜெயலலிதா அமைச்சரவையில் இஸ்லாமியருக்கு பிரதிநிதித்துவம் இல்லை என சர்ச்சை வெடித்து. இந்த நிலையில் வாணியம்பாடி தொகுதியில் போட்டியிட்டு வென்ற நிலோஃபர் கபில் தொழிலாளர் நலத்துறை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.
இதன்மூலம் ஜெயலலிதா அமைச்சரவையில் 32 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் நால்வரும் நாளை மறுதினம் பதவியேற்க இருக்கிறார்கள்.