இந்தியாவின் அதிக பாதுகாப்பான மகிழுந்து( கார்) எது என்பதை சோதனை செய்த குலோபல் புதிய கார் சோதனை நிகழ்வில் சோதிக்கப் பட்ட இந்திய கார்கள் அனைத்தும் சோதனையில் வெற்றி பெறவில்லை எனும் அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் கார் தயாரிக்கும் ஐந்து தயாரிப்புகளின் கார்கள் சோதனையிடப்பட்டது. அதில் பெரியவர்களுக்கான பாதுகாப்பு சோதனையில் அனைத்து கார்களும் தேர்ச்சி பெறவில்லை.
ரெனால்ட் கிவிட், மாருதி சுசுகி செலீரியோ மற்றும் ஏகொ, தி மஹிந்திரா ஸ்கார்பியோ மற்றும் ஹ்யூண்டாய் ஈயான் ஆகிய கார்கள் சோதிக்கப்பட்டன.
செவ்வாய்க்கிழமையன்று புதுதில்லி ஃபரிதாபாத்தில் நடைபெற்ற இந்திய ஆட்டோமொபைல் பாதுகாப்பு மாநாட்டில் கலந்துக்கொண்ட என்.சி.ஏ.பி. தலைவர் டேவிட் வார்ட் இதனை தெரிவித்தார்.
ஐ.நாவின் அறிவுறுத்தல் படி , இந்திய அரசு புதிதாய் இயற்றியுள்ள சட்டத்தின் முக்கியவத்துவத்தை தற்போதைய பரிசோதனை முடிவுகள், உணர்த்துகின்றன.
இந்த சட்டப்படி, 2017 அக்டோபர் முதல் அனைத்து கார்களும் இந்த சோதனையில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
டேவி வார்ட் கூறுகையில், “இந்த கார் தயாரிப்பாளர்கள், அரசு நடவடிக்கை எடுக்கும் வரை காத்திருக்காமல் , நஷ்டத்தை பொருட்படுத்தாமல் இந்த கார்களை சந்தையில் இருந்து திரும்பப் பெறவேண்டும். இதன் தயாரிப்புகளை நிறுத்தவேண்டும். ஐ.நா.வின் பரிந்துரையை ஏற்று அனைத்து வாகன உற்பத்தியாளர்களும் தரம் குறைவான வாகனங்கள் தயாரிப்பதை நிறுத்தி அனைத்து வாகன உற்பத்தியாளர்களும் “விபத்து மோதல் தேர்வில்” தேர்ச்சி பெறும் வாகனங்களை மட்டுமே தயாரிக்க வேண்டும் “எனக் கோரிக்கை விடுத்தார்.
காணொளி:
மேலதிக தகவலுக்கு: http://www.globalncap.org/