மாநிலத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது ஊதங்கரையில் உள்ள ஸ்ரீ வித்யா மந்திர் பள்ளி.
சில நாட்களுக்கு முன்னர், சட்டசபை தேர்தல் முன்னிட்டு பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ஊத்தங்கரையில் உள்ள ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் 125 கிராம் எடையுள்ள 245 தங்க நாணயங்களும் , ரூபாய் 3.4 கோடி ரொக்கப்பணமும் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர்.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரின் சார்பாக வாக்காளர்களுக்கு வினியோகிக்க இந்தப் பள்ளியில் பணமும் பரிசுப்பொருட்களும் பதுக்கிவைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து தேர்தல் பறக்கும் படையினர் சோதனை செய்தபோது பணமும் தங்கமும் கைப்பற்றப்பட்டது.
எனவே தேர்தல் விதிமுறைப்படி வருமானவரித்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
பள்ளி நிர்வாகம் , இந்த தங்க நாணயங்களும் ரொக்கமும் நன்கொடையாய் கிடைத்தது என்று விளக்கம் அளித்தது. எனினும் வருமானவரித்துறையினர் இதனை நம்ப வில்லை. எனவே பணத்தையும் தங்ககாசுகளையும் ஜப்தி செய்தனர்.
கைப்பற்றபட்ட பணம் என்ன ஆனது என்பது குறித்து பள்ளி நிர்வாகம் இதுவரை விளக்கம் அளிக்க வில்லை.