2014ல் பாஜக கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்த பின்னர் , பெங்களூரு உட்பட 12 நகரங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் மோடி ஆட்சிக்கு வந்த பின்னர், இந்துக் கலாச்சாரத்தை திணிப்பதில் ஆர்வம் காட்டி வருவது வாடிக்கையான நிலையில், தற்பொழுது அவர்கள் முக்கிய நகரங்களின் பெயரை மாற்ற கோரிக்கை வைத்துள்ளனர். பா.ஜ.க ஆட்சியில் உள்ள மாநிலங்களில் மாட்டிறைச்சிக்கு தடை, ஊர்/சாலைப் பெயர்களை மாற்றுவது எனப் பல்வேறு செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
சமீபத்தில் தில்லியில் உள்ள அக்பர் சாலையை மகாரானா பிரதாப் பெயரில் மாற்ற ஹரியானா முதல்வர் கோரிக்கை வைத்தார். சுப்ரமணிய சாமியும் அதனை ஆதரித்து பேட்டி அளித்தார். மத்திய அரசு அந்தக் கோரிக்கையை நிராகரித்து விட்டது.
அதற்கு சில நாட்களுக்கு முன்னர் ஹரியானா வில் உள்ள குர்காவுன் நகரின் பெயரை குருகிராம் என்று பெயர் மாற்றி அறிவித்தது பா.ஜ.க. அரசு. அத்ற்கு சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் கிண்டல் பதிவுகள் செய்தது நினைவிருக்கலாம்.
குருகாவுன் நகர்ஃஅம் பாண்டவர்களால் குரு துரோணாச்சார்யாவிற்கு பரிசளிக்கப் பட்டது என்றும், அதனால் அவ்விடம் குருகிராமம் என்றழைக்கப்பட்டதாகவும் , பின்னர் அந்தப் பெயர் மறுவி, குருகிராமம் குர்காவுன் ஆனதாகவும் கூறி, குருகிராம் என்று பெயர் மாற்றம் செய்தனர்.
1996 ல், பா.ஜ.க.-சிவசேனை ஆட்சியில் இருந்தபோது, பாம்பே எனும் பெயரை தங்களுடைய உள்ளூர் பெண் கடவுளான மும்பை தேவியின் நினைவாய் மும்பை என்று மாற்றினர்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் ஒரு ஊரின் பெயர் அதன் கலாச்சாரம் மற்றும் வரலாற்றை பிரதிப்பலிப்பதாக இருக்க வேண்டும். எனவே தான், நம் நாட்டின் மீது படை எடுத்தவர்களால் மாற்றப்பட்டு/ பெயரிடப்பட்டு தற்பொழுது புழக்கத்தில் இ ருக்கும் பெயரை விட வரலாற்று பெயர்களையே நாங்கள் பயன்படுத்திவருகின்றோம் என்கின்றனர்.
2014ல் பாஜக கர்நாடகாவில் ஆட்சிக்கு வந்த பின்னர் , பெங்களூரு உட்பட 12 நகரங்களின் பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. பார்க்க அட்டவணை.
அதே வகையில், தற்பொழுது அகமதாபாத்தின் பெயரை கர்னாவதி என்றும், அவுரங்காபாத்தை சத்திரபதி சம்பாஜி என்றும் ஹைதராபாத்தை கடவுள் பாக்யலட்சுமி பெயரிலும் மாற்ற கோரிக்கை வைத்துள்ளது.
அகமதாபாத் ஒருக்காலத்தில் அந்தப்பகுதியை ஆண்ட கரந்தேவ் அரசரின் பெயரில் கர்னாவதி எண்று அழைக்கப்பட்டுவந்தது. ஆனால் அதன் பிறகு முகலாயர் படைஎடுப்பின் போது அதனை ஆண்ட முதலாம் அகமது ஷா அவர்களால் அவரின் மத போதகர்கள் ஷேய்க் அகமது கட்டு, காஷி அகமது, மாலிக் அகமது மற்றும் தன் பெயரின் நினைவாய் அகமதாபாத் என்று பெயரிடப்பட்டது.
வளர்ச்சி வளர்ச்சி என்று வாக்குகள் வாங்கி ஆட்சியைப் பிடித்ததும் பெயர்களை மாற்றுவது புராணக் கால பெயர்களை சூட்டுவதால் மாநிலத்தில் நிகழ்ந்து வரும் கொலை,கொள்ளை, வண்புணர்ச்சி மற்றும் சாதித் தீண்டாமைக் கொடுமைகள் நீங்கி விடும் என்று கர்நாடக பா.ஜ.க. அரசு நம்புகின்றது போலும்.