a
“கச்சத்தீவில் உள்ள அந்தோணியார் கோயிலை புணரமைக்க தன்னிச்சையாக திட்டமிட்டு இடிக்க முடிவு செய்திருக்கும் இலங்கை அரசை தடுக்க வேண்டும்” என்று கூறி பிரதமர் மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
இந்தியா இலங்கை இடையே பாக் ஜலசந்தியில் இருக்கும் சிறு தீவு, கச்சத்தீவாகும். இந்தியாவுக்குச் சொந்தமான இந்தத் தீவு நட்பு அடிப்படையில் இலங்கைக்கு அளிக்கப்பட்டது. அதே நேரம் இந்தத் தீவில் இந்திய மீனவர்கள் வலை விரித்துக்கொள்ளவும் ஓய்வெடுக்கவும் அனுமதி உண்டு.
இந்தத் தீவில் உள்ள அந்தோணியார் கோயில், மீனவர்களின் முக்கியமான வழிபாட்டுத்தலமாகும், வருடா வருடம் இங்கு நடைபெறும் திருவிழாவில் இந்தியா இலங்கை இரு நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் கலந்துகொள்வார்கள்.
இந்த கோயிலை இடித்துவிட்டு, புதிதாக கட்ட இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது.
இதைத் தடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில், “கச்சத்தீவில் உள்ள அந்தோணியார் கோயிலை புணரமைக்க தன்னிச்சையாக திட்டமிட்டுள்ள இலங்கை அரசு அக்கோயிலை இடிக்க இருக்கிறது. இதை அனுமதித்தால் தமிழ மீனவர்களின் பாரம்பரிய உரிமையை விட்டுக்கொடுப்பதாக ஆகிவிடும். தமிழக மீனவர்களின் ஆலோசனையையும் கேட்டு கோயில் புணரமைக்கப்படவேண்டும். அதை இந்தியா மற்றும் இலங்கை இணைந்து செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.