புதுச்சேரி: தமிழகத்தை போலவே புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் வரும் 16ம் தேதி, சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. . இதையடுத்து ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி, இன்று மாலை தேர்தல் அறிக்கை வெளியிட்டது.
முதல்வர் ரங்கசாமி வெளியிட்ட அந்த அறிக்கையில் மக்களைக் கவரும் சில திட்டங்கள் உள்ளன.
மக்களுக்கு தற்போது வழங்கப்பட்டுவரும், 10 கி.லோ இலவச அரிசி, 20 கிலோவாக அதிகரிக்கப்படும். . புதுச்சேரிக்கு, யூனியன் பிரதேசம் என்ற நிலையில் இருந்து மாநில அந்தஸ்து பெற்றுத்தரப்படும். உள்ளூர் பேருந்து கட்டணம் அதிகபட்சம் ரூ.5 என்ற அளவில் இருக்கும். மருத்துவ படிப்பு உதவி தொகை 4 லட்சமாக உயர்த்தப்படும். விவசாய கடனுக்கான வட்டியை அரசு செலுத்தும். ஒவ்வொரு குடும்பத்திற்கும் இலவச வாஷிங்மெஷின் இலவசமாக அளிக்கப்படும்” என்று குறிப்பிடப்பட்டுளளது.
அதே நேரத்தில்,. புதுச்சேரியில் மது விலக்கு அமல்படுத்தப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.