பா.ஜ.க. தலைவர் அமித் ஷா, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி இருவரும் திங்கட்கிழமை பத்திரிக்கையாளர் சந்திப்பில் நரேந்திர மோடியின் கல்விச் சான்றிதழ் எனத் தாங்கள் நம்பும் ஆவணங்களை வெளியிட்டனர்.
இதனை வெளியிட்ட கையோடு, ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கெடு விதித்தனர்.
அஹமதாபாத் சமூகப் போராளி ரோஷன் ஷா கூறுகையில், ” மோடியின் இரண்டு எம்.ஏ. பட்டச் சான்றிதழ்களும் மோசமான போட்டாஷாப் முயற்சி என விளக்கம் அளித்துள்ளார்.
டைம்ஸ் ஆப் இந்தியாவால் வெளியிடப்பட்ட மோடியின் எம்.ஏ. பட்டச் சான்றிதழில் குஜராத் பல்கலைக்கழகத்தின் அச்சு இல்லை.ஆனால் பாஜக வெளியிட்டுள்ள எம்.ஏ. சான்றிதழில் குஜராத் பல்கலைக்கழகத்தின் அச்சு நன்றாக தெரிகின்றது.
இது மோசமான அரைவேற்காடு போட்டாஷாப் முயற்சி என கடுமையாக சாடியுள்ளார்.