
ரஜினி – ஷங்கர் கூட்டணியில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் எந்திரன் 2 திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கிறார். பிரபல இந்தி நட்சத்திரம் அக்ஷய் குமார் முக்கிய வேடத்தில் தோன்றுகிறார். இசை ஏ.ஆர்.ரஹ்மான்.
350 கோடி ரூபாய் செலவில் தயாராகிறது இந்தத் திரைப்படம். இதுவரை இவ்வளவு செலவில் இந்தியாவில் எந்த ஒரு படமும் உருவாக்கப்படவில்லை.
சென்னை, டில்லியில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது. அடுத்ததாக மொராக்கோ, பொலிவியா நாடுகளில் படப்பிடிப்பு நடக்க இருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் மே மாதம் நிறைவடையுமாம்.
அதன் பிறகு போஸ்ட்புரடக்சன் வேலைகள் முடிந்து அடுத்த வருட தீபாவளிக்கு படம் ரிலீஸ் ஆகும் என்று தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
.
Patrikai.com official YouTube Channel