2
அழகப்பா பல்கலை துவக்கம்
காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகம் 1985ம் ஆண்டு இதே நாள் உருவானது. அழகப்பா பல்கலைக்கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களுள் ஒன்று.  சிவகங்கை மாவட்டத்தின் காரைக்குடியில் அமைந்துள் இப் பல்கலைக்கழகம்,  அழகப்பச் செட்டியாரின் கல்வி அறக்கட்டளையால்  1947 இல் அழகப்பா அரசினர் கலைக்கல்லூரி துவங்கப்பட்டது. பிறகு 1950 இல் ஆரம்பிக்கப்பட்ட கல்வியியல் கல்லூரி, 1956 இல் தொடங்கப்பட்ட உடற்பயிற்சிக் கல்லூரி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட இக்கல்வி நிறுவனம் 1985ம் ஆண்டு மே 9 இல் பல்கலைக் கழகமாக தரம் உயர்த்தப் பட்டது.
இப்பல்கலைக்கழகத்தின் வரம்பில் ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் அமைந்துள்ள 39 கல்லூரிகளும் ஒரு சுயாட்சி பெற்ற கல்லூரியும் உள்ளன. இப்பல்கலைக் கழகத்தின் தொலை தூரக் கல்வி மையம் மிகவும் புகழ் பெற்றதாகும்.
1
கோபாலகிருஷ்ண கோகலே பிறந்தார்
இந்திய விடுதலைப் போராட்ட வீரர் கோபால கிருஷ்ண கோகலே 1866ம் ஆண்டு இதே தினத்தில் பிறந்தார்  சுதந்திரமே லட்சியம் எனக்கொண்ட இவர், தனது குறிக்கோளை அடைவதற்காக இரு முக்கிய கொள்கைகளைப் பின்பற்றினார்: வன்முறையைத் தவிர்த்தல் மற்றும் இருக்கும் அரசு நிறுவனங்களுக்குள்ளேயே மாற்றத்தைக் கொண்டுவருதல் ஆகியவையாகும்.
, ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக சுதந்திரப் போராட்டத்தோடு, சமூக மாற்றத்திலும் அக்கற கொண்டவராக இவர் விளங்கினார்.
இந்திய தேசிய காங்கிரசின் மூத்த தலைவரும் இந்திய சேவகர்கள் அமைப்பின் நிறுவனருான இவர்,. மகாத்மா காந்தியின் அரசியல் குரு ஆவார்.  காந்தி தன்னுடைய சுயசரிதையில் கோகலேவை தன்னுடைய வழிகாட்டி என்று குறிப்பிடுகிறார்.