ஹைதரபாத்: ஏழை முஸ்லிம் சிறுமிகள் 4 வார ஒப்பந்த மனைவியாய் விற்கப்பட்டு வருவது வாடிக்கையான செயலாகிவிட்டது.
மத்திய கிழக்கு மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் இருந்து சுற்றுலா வரும் பயணிகள், குறுகிய கால திருமணத்தை விரும்புவதற்கு காரணம், இஸ்லாம், விபச்சாரத்தை ஏற்றுக் கொள்வதில்லை.
ஏழைக் குடும்பங்களும் இத்ற்கு ஒத்துக் கொள்வதற்கு காரணம் வறுமையும் , தங்கள் மகள்களின் திருமணத்தை நடத்த இயலாத சூழ்நிலையும் தான் காரணம்.
எனவே ஏழைப் பெற்றோர், மகள்களின் உண்மையான திருமணத்தை நடத்த பொருளீட்டும் ஆதாரமாய் இந்த குறுகிய கால ஒப்பந்த திருமணத்தை நடத்த வேண்டிஉள்ளது.
ஹைதராபாத் பெண்கள் மற்றும் குழந்தைகள் நலவாழ்வு சங்கத்தின் தலைவர் ஷிராஸ் அமீன கான் கூறுகையில், ” மாதத்திற்கு 15 ஒப்பந்த திருமணங்கள் நடைபெற்று வருவது மிகவும் சகஜமான ஒன்றாக மாறிவிட்டது ” .இந்த எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருவது குறிப்பிடத்தக்கது. ஹதராபாத்தை நோக்கி பயணிகள் வருவதற்கு காரணம், இங்கு ஏழ்மையில் உழலும் குடும்பம் அதிகமாக உள்ளனர். 30 முதல் 40 % குடும்பத்தினர், வறுமை காரணமாக இந்த ஒப்பந்த திருமனத்திற்கு ஒத்துக்கொள்கின்றனர். இது நிறுத்தப் பட வேண்டும்.” என்றார்.
இவ்வாறு பாதிக்கப் பட்டதில், ஹைதராபாத் மொகல் பூரியில் உள்ள ஒரு சிறிய வீட்டில் வசித்து வந்த அபலைப் பெண் நவூஷிம் டொபஸம் மூலம் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
அவர் கூறுகையில், ” என்னுடைய பெற்றோர் கட்டாயப் படுத்தி சூடான் நாட்டைச் சேர்ந்த ஒரு 40 வயதுடையவருடன் நான்கு வாரம் அவரது மனைவியாய் இருக்கும் ஒப்பந்த திருமணம் செய்ததால் நான் வீட்டை விட்டு வெளியேறி விட்டேன்.
சூடானைச் சேர்ந்த திருமணமாகி இரு குழந்தைகளுக்கு தகப்பனான உசாமா இப்ராஹிம் முஹமது எனும் ஒரு எண்ணை நிறுவன அதிகாரியிடம், தான் உட்பட மூன்று இளம்பருவப் பெண்களை தன்னுடைய அத்தை அழைத்து சென்று அறிமுகப்படுத்தியதாகவும், பின்னர் தன் வீட்டில் வைத்து திருமணச் சடங்கு ஏற்பாடு செய்யப் பட்டதாகவும் கூறினார்.
ஒரு லட்சம் பணம் பெற்றுக்கொண்ட அவரது அத்தை , அவரது பெற்றோருக்கு ₹ 70,000 கொடுத்ததாகவும், மதகுருவிற்கு ₹ 5000, உருது மொழிபெயர்ப்பாளருக்கு ₹ 5000 கொடுத்து விட்டு மீதம் ₹ 20,000த்தை அவர் வைத்துக் கொண்டதாகவும் காவல் துறையிடம் தெரிவித்தார்.
திருமண சன்றிதழிலேயே, விருந்தினரின் விடுமுறை முடிவில் விவாகரத்திற்கான ஒப்பந்தமான “தலாக்நாமா” வும் இணைக்கப்பட்டு இருந்தது.
இந்த திருமணத்திற்கு மறுநாள் இவரது வீட்டிற்கு வந்த சூடான்காரர் இவரை உடலுறவு கொள்ள வற்புறுத்திஉள்ளார். ஆனால் இவர் அதற்கு மறுத்துவிட்டார். இந்த பெண் ஒரு மைனர் மற்றும் அந்த சூடான்காரர் இவரது தந்தையை விட அதிக வயதானவர்.
ஒருநாள் வீட்டை விட்டு தப்பி ஓடிவந்த நவூஷிம் டொபோசம்- யை ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த போலிசார் மீட்டனர்.
இவரது வாக்குமூலத்தை வைத்து, சூடான் மணமகன், அத்தை, மதகுரு ஆகியோர் கைது செய்யப் பட்டனர். தலைமரைவான இவரது பெற்றோரை கைது செய்ய வாரண்ட் பிறப்பிக்கப் பட்டுள்ளது.
இவரது பெற்றோர் மீது மைனர் பெண்ணுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தமைக்காக வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது. இந்தப் பெண்ணின் பிறந்த தேதியை மாற்றி போலி சான்றிதழ் தயாரித்துள்ளனர். இவரது வயதை 24 வயதென காட்டியுள்ளனர். இவர்களின் முகத்திரையை கிழிக்கவே நான் தப்பி ஓடி வந்தேன். என் வீடிற்கு செல்ல எனக்கு விருப்பம் இல்லை. பெற்றோரைக் கண்டால் பயமாகவுள்ளது என்றார்.
பெண் குழந்தைகளுகு வரதட்சணை கொடுத்து திருமணம் செய்துவைக்க முடியாமல் போவது தான் இது போன்ற சம்பவங்கள் ஏற்படக் காரணம். எனவே முஸ்லிம் மதத் தலைவர்கள் மற்றும் பெண்கள் அமைப்பினர் இணைந்து இது போன்று பெண்கள் விற்கப் படுவதை தடுக்க, வரதட்சணைக்கு எதிராக பிரச்சாரமும், கல்வி பொருளாதார மேம்பாட்டிற்காக உரிய திசையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பத்திரிக்கை.காமின் கருத்து .
நன்றி: டெலிகிராப்- யூ.கே.