HMT கடை மூடப்பட்டது– மே தினத்தன்று ஊழியர்களுக்கும் இளஞ்சிவப்பு சீட்டுகள் வழங்கப்பட்டன.
தும்கூரில் உள்ள பிரபல இந்துஸ்தான் மெஷின் டூல்ஸ் (HMT) பொதுத்துறை நிறுவனம் செயல்பாடுகளை நிறுத்திவிட்டதால், தங்களது கடைசி 120 ஊழியர்களுக்கும் மே தினத்தன்று பணி நிறுத்த கடிதங்களை வழங்கினர்.
ஒருகாலத்தில் முதன்மையான கைக்கடிகார பிராண்ட்களான சங்கம், உத்சவ், எலகன்ஸ் மற்றும் பைலட் ஆகியவற்றை உற்பத்தி செய்த HMT வாட்ச் தொழிற்சாலை கிளை இப்போது வரலாற்றின் பக்கங்களில் குறிக்கப்பட்டுள்ளது.
பொதுத்துறை விவகாரங்களில் மோசமான நிலையை குறிக்கும் வகையில், மத்திய அரசு ஏற்கனவே இந்தியா முழுவதும் உள்ள HMT வாட்ச் உற்பத்தி அலகுகளை மூட முடிவெடுத்துள்ளது. பெங்களூரில் உள்ள இரண்டு அலகுகளை மூட முடிவு செய்த மேலாண்மை, அதே சமயத்தில் ஜம்மு, ராணிபாக் மற்றும் தும்கூர் ஆகிய இடங்களில் உள்ள மற்ற அலகுகளையும் சனிக்கிழமை அன்று மூடியது.
HMT ஆலையில் முதல் பெண் ஊழியர் என்று கூறிக்கொண்ட நாகரத்னம்மா, “மே தினத்தன்று எங்களை விடுவிக்க முடிவு செய்த நிறுவனத்தின் நடவடிக்கை சரியானதல்ல. நாங்கள் இந்த தொழிற்சாலையை உருவாக்க போராடி இதற்காக அனைத்தையும் கொடுத்துள்ளோம்”, என்று கூறினார்.
ரமேஷ் என்ற மற்றொரு ஊழியர், அவர் இங்கு ஏழரை ஆண்டுகளாக வேலை பார்த்ததாகவும், ஆனால் 40 மாதங்களுக்கு மட்டும் தான் சம்பளம் கிடைத்தது என்வு கூறினார். “இது பிரதமர் மோடியின் ‘மேக் இன் இந்தியா விளைவின் பரிசாகும்,” என்று கொந்தளித்த அவர், தான் எப்படி இந்த சிறிய அளவு பணத்தை மட்டும் வைத்து வேலை கிடைக்கும் என்ற எந்த நம்பிக்கையும் இல்லாமல் ஒரு புதிய வாழ்க்கையை ஆரம்பிக்க முடியும் என்று கேட்டார்.
சித்தப்பா (!)என்ற மற்றொரு ஊழியர், தாங்கள் விருப்ப ஓய்வு எடுக்க வேண்டுமென மேலாண்மை அச்சுறுத்தியதாகவும் அதாவது ஆறு மாத சம்பளம் மட்டுமே கொடுக்கப்படும் எனவும் மிதமுள்ள தொகை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும் எனவும் கூறினார். “எங்களது எதிர்காலத்திற்காக பயந்து, நாங்கள் கட்டாயப்படுத்தப்பட்டு விருப்ப ஓய்வு ஆவணங்களில் கையெழுத்திட்டோம்” எனக் கூறினார்.