இந்திய விண்வெளி ஆய்வு மையம், கடல் சார் ஆராய்ச்சிக்காக 7 தொலை உணர்வு செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்த திட்டமிட்டது. இதில் முதலாவதாக, ஐஆர்என்எஸ்எஸ் 1ஏ முதல் ஐஆர்என்எஸ்எஸ் 1எஃப் வரை செயற்கைக் கோள் கடந்த 2013-ஆம் ஆண்டு நடப்பாண்டின் மார்ச் மதம் முடிய விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டு நிலை நிறுத்தப்பட்டது.இதன் தொடர்ச்சியாக இன்று ஐஆர்என்எஸ்எஸ்-1ஜி செயற்கைக்கோள் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
இந்த செயற்கைக்கோளானது கடல்வழி ஆராய்ச்சிக்காக அனுப்பப்பட்டுள்ளது. கடல் பகுதிகளின் பாதுகாப்பு, இயற்கை சீற்றம், இயற்கை பேரிடர் மேலாண்மை, திசை அறிதல் உள்ளிட்ட கடல்சார் ஆராய்ச்சிப் பணிகளை இந்த செயற்கைக்கோள் பயன்படுத்தப்படும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ள இந்த செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 12 ஆண்டுகள் ஆகும்.
இந்த செயற்கைக்கோள் மூலம் 1,500 கிலோமீட்டர் சுற்றளவு பரப்பளவுக்கு கடல் வழிகளையும், கடல் எல்லைகளையும் துல்லியமாக கண்காணிக்க முடியும். இதன்மூலம் தரையிலும், வான்வெளியிலும் செல்லும் அனைத்து வாகனங்களையும் கண்காணிக்க இயலும்.
இன்று இந்தியா ஜி.பி.எஸ். தொழில்நுட்பத்தில் தன்னிறைவு பெற்றுள்ளது என இஸ்ரோ விஞ்ஞானிகளின் கூறியுள்ளனர். அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகள் இந்த தொழில்நுட்பத்தை சொந்தமாக பயன்படுத்தும் நாடுகளின் வரிசையில் இந்தியா இடம்பெற்றுள்ளது.
விஞ்ஞானிகளின் இந்த சாதனைக்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தி கூறியுள்ளார், “சொந்தமாக ஜிபிஎஸ் வைத்துள்ள 5 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். இந்தியா அனுப்பிய 7 செயற்கை கோள்களும் வெற்றி அடைந்துள்ளன. விண்வெளி ஆராய்ச்சியில் இந்தியா தன்னிறைவு அடைந்துள்ளது. மீனவர்கள் முதல் விமானிகள் வரை அனைவருக்கும் ஜி.பி.எஸ் உதவும். இந்தியாவின் ஜி.பிஎஸ் சேவையை சார்க் நாடுகளும் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த ஜிபிஎஸ் சேவைக்கு நாவிக் என பெயரிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.