raamanna1

(கேள்விகள் நாம்.. பதில்கள்… ராமண்ணா! நம்முடன் சேர்ந்து நீங்களும் கேட்கலாம் வாசக நட்புகளே..!)

 

1

சமீபத்தில் ராமண்ணா ஆச்சரியப்பட்ட விசயம் என்ன?

சமீபத்தில் அல்ல…  ரொம் நாளாகவே ஒரு விசயம், என்னை ஆச்சரியப்படுத்திக்கொண்டேடேடே இருக்கிறது.   கருணாநிதி குடும்பத்தினர் கோயிலுக்குப் போனால் அதை “செய்தி” ஆக்குகபவர்களை நினைத்துத்தான் ஆச்சரியப்படுகிறேன். இன்னமும் கருணாநிதியை பகுத்தறிவாளர், நாத்திகர் என்று நினைத்துக்கொண்டிருக்கும் இவர்களை நினைத்து ஆச்சரியப்படாமல் என்ன செய்வது?

 

 

4 உங்கள் பார்வையில் மிகச் சிறந்த நடிகர் யார்?

சந்தேகமே இல்லாமல் மோடிதான்!

விவசாயிகளுக்காக உருகி உருகி பேசுகிறார்.  அதே நேரம் விவசாயிகளுக்கு எதிரான நில அபகரிப்பு மசோதாவை கொண்டு வரத் துடிக்கிறார்.

“இந்தியாவில் கழிப்பறைகள் இல்லை” என்று லஜ்ஜையின்றி வெளிநாடுகளில் சொல்கிறார். அதே வெளிநாட்டில் “டிஜிட்டல் இந்தியா” என்று முழங்குகிறார்.

தவிர.. அவரது புகைப்படங்களைப் பாருங்கள்.. எந்தவிதமான வேடமும் அப்படியே பொருந்துகிறதே!

 

3 ராமண்ணா யாரை நினைத்து பயப்படுகிறார்?

மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியை நினைத்துத்தான்!  “தமிழக அரசின்  மோசமான நிதி மேலான்மை காரணமாக போக்குவரத்து மற்றும் மின்சார துறையில்  2013 – 14ம் நிதியாண்டில் மட்டும் , 13 ஆயிரம் கோடி ரூபாய் நஷ்டம்” என்று அறிவித்திருக்கிறாரே…

நீதியரசர் குன்ஹா பட்டபாடு நினைவுக்கு வருகிறது. இந்த தணிக்கை அதிகாரி என்ன பாடுபடப்போகிறாரோ என்றுதான் பயமாக இருக்கிறது.

 

2மரணதண்டனை கூடாது என பலரும் முழங்கும் நேரத்தில், இன்று  மும்பை குண்டு வெடிப்பு குற்றவாளிகளுக்கு தூக்குதண்டனை விதிக்கப்பட்டடிருக்கிறதே!

கோரமான அந்த குண்டு வெடிப்பு நடந்தது 2006ம் ஆண்டு.  ஏழு இடங்களில் வெடித்த குண்டுகளால் ஏராளமானோர் பலியானார்கள், காயமடைந்தார்கள்.  இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு, தங்களது தரப்பை நிரூபிக்க முறையான வாய்ப்புகள் அளிக்கப்பட்டன.  குற்ரம் சாட்டப்பட்ட 12 பேரில் ஐவருக்கு தூக்குதண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது.  தீர விசாரித்த பிறகே  தூக்குதண்டனை வழங்கப்ப்டடிருக்கிறது.

அப்பாவிகளைக் கொல்லும் குரூரர்களுக்கு தூக்கு தண்டனை கொடுப்பது என்ன தவறு?

குற்றவாளிகளின் “வாழும் உரிமை”யை பார்க்கும் மனித உரிமை ஆர்வலர்கள், அந்த பயங்கரவாதிகளால் பலியான அப்பாவிகளின் “வாழும் உரிமை” பற்றி சிந்திக்க மாட்டார்களா..?

விசாரணையில் தவறு நேர்ந்திருக்கிறது  என்று கூறி, குறிப்பிட்ட வழக்கில் தண்டனையை நிறுத்த கோரலாம்.  ஆனால் ஒட்டுமொத்தமாக மரணதண்டனையே கூடாது என்பது சரியல்ல.

 

5அட்டாக் பாண்டிக்கு போலீஸ் டிரீட்மெண்ட் எப்படி இருக்கிறதாம்?

கடந்த 21ம் தேதி மும்பையில் கைது செய்யப்பட்ட அட்டாக் பாண்டியை, தங்கள் கஸ்டடியில் நான்கு நாள்  வைத்து விசாரித்தது போலீஸ். வாக்குமூலமும் வாங்கியது.  மேலும் 2 நாள் தங்கள் காவலில் வைத்து விசாரிக்க மனு செய்தது. அதற்கு  மதுரை குற்றவியல் நீதிபதி பால்பாண்டி, இன்று அனுமதி வழங்கிவிட்டார்.

ஆகவே போலீஸ் விசாரணை தொடரும். இதுவரை நடந்த விசாரணையின் போது, அட்டாக் பாண்டியிடம் போலீசார் அன்பாகவே நடந்திருக்கிறார்கள் என்று தகவல்.

அட்டாக்குக்கு பிடித்த ரவா தோசையிலிருந்து, சிக்கன் கறி வரை அனைத்தும் அளிக்கிறார்களாம். அட்டாக்கின் வக்கீல் மூலம் புது டிரஸ்ஸும் எடுத்துக்கொடுத்திருக்கிறார்கள். உடம்பு வலி என்று அட்டாக் சொன்னவுடன் மருத்துவ ஆலோசனைக்கும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.

“மானே, தேனே..” என்று கொஞ்சாத குறைதான்.

ஆரம்பத்தில், பொட்டு சுரேசை தான் கொல்லவில்லை என்ற அட்டாக், பிறகு ஒப்புக்கொண்டாராம். ஆனால், மு.க. அழகிரி, மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கும் தனக்குமான தொடர்புகள் பற்றி சொல்ல மறுக்கிறாராம்.

இப்போது விசாரணைக்கு மேலும் இரண்டு நாள் வாங்கியிருக்கிறார்கள் போலீசார்.

அட்டாக்கை ஸ்பெஷலாக விசாரிக்க புது அதிகாரியை அமர்த்தப்போகிறார்களாம்.  கூடுதல் எஸ்பியாக திருநெல்வேலி குற்ற ஆவண காப்பகத்தில் பணியாற்றும் குமாரவேல்தான் அவர்.

ஏற்கெனவே  திமுக ஆட்சியில் மதுரையில் உதவி ஆணையராக பணி புரிந்தவர். அழகிரி குடும்பத்துக்கு பாதுகாப்பு  அதிகாரியாகவும் இருந்தார். ஆகவே ஏற்கெனே அட்டாக் பாண்டிக்கு நன்கு அறிமுகமான இவர் மூலம் விசாரணை தொடரும் என்கிறார்கள்.

எப்படியாவது, அட்டாக் பாண்டிக்கும் முக அழகிரி அண்ட் ஸ்டாலினுக்கும் உள்ள தொடர்புகள் பற்றி அறிவதில் காவல்துறை ரொம்பவே ஆர்வமாக இருக்கிறது.