sm
மு.க.ஸ்டாலின், விஜயகாந்த், திருமாவளவன் ஆகியோருக்கு எவ்வளவு சொத்து என்ற விவரம் வேட்புமனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் நேற்று தாக்கல் செய்த வேட்புமனுவுடன் தன்னுடைய சொத்து விவரங்களையும், மனைவி துர்காவின் சொத்து பட்டியலையும் அளித்துள்ளார்.
st
அதில், வங்கி சேமிப்பு, அசையும் மற்றும் அசையா சொத்துகளின் மொத்த மதிப்பு ரூ.4 கோடியே 13 லட்சத்து 83 ஆயிரத்து 988 ஆக உள்ளது. (அசையும் சொத்துகள் மதிப்பு ரூ.80 லட்சத்து 33 ஆயிரத்து 242, அசையா சொத்துகள் மதிப்பு ரூ.3 கோடியே 33 லட்சத்து 50 ஆயிரத்து 746 ஆகும்.)
மு.க.ஸ்டாலின் வசம் கையிருப்பு தொகையாக ரூ.50 ஆயிரம் உள்ளது. மேலும் 3 வங்கிகளில் அவருக்கு வைப்பு தொகையாக 23 லட்சத்து 13 ஆயிரத்து 442 உள்ளது. இதுதவிர வங்கி சேமிப்பு கணக்கில் ரூ.15 லட்சத்து 22 ஆயிரத்து 670-ம், தேர்தல் செலவுக்காக தொடங்கப்பட்ட வங்கி கணக்கில் ரூ.10 லட்சத்து ஆயிரம் உள்ளது.
மேலும் அஞ்சுகம் குடும்ப அறக்கட்டளையில் ரூ.90 ஆயிரத்து 930-ம், தயாளு குடும்ப அறக்கட்டளையில் மூன்றில் ஒரு பங்கு உள்ளது. இந்த அறக்கட்டளைக்கு மதுரை மாவட்டம் மாடக்குளத்தில் 21 சென்ட் காலி மனை உள்ளது. இதன் மதிப்பு ரூ.30 லட்சத்து 55 ஆயிரம் ஆகும்.
மு.க.ஸ்டாலினுக்கு திருவள்ளூர் மாவட்டம் உளுந்தை கிராமத்தில் 3.85 ஏக்கர் நிலம் உள்ளது. இதன் சந்தை மதிப்பு ரூ.1 கோடியே 82 லட்சத்து 92 ஆயிரம் ஆகும். தஞ்சை மாவட்டம் அகரத்திருநல்லூர் கிராமத்தில் 2.85 ஏக்கர் நிலம் உள்ளது. இதன் மதிப்பு ரூ.3 லட்சத்து 24 ஆயிரத்து 610 ஆகும். இது தவிர சென்னை வேளச்சேரி சீதாபதி நகரிலும், திருவாரூர் சன்னதி தெருவிலும் ஸ்டாலினுக்கு வீடுகள் உள்ளது. இதன் சந்தை மதிப்பு ரூ.3 கோடியே 33 லட்சத்து 50 ஆயிரத்து 746 ஆகும்.
மு.க.ஸ்டாலினுக்கு சொந்தமாக ஒரு கார் கூட இல்லை என்றும், அதே போல் அவரிடம் தங்க நகைகள் எதுவும் இல்லை என்றும் சொத்து பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மு.க.ஸ்டாலின் மனைவி துர்காவின் பெயரில் ரூ.31 லட்சத்து 25 ஆயிரத்து 837 அசையும் சொத்துகளும், ரூ.1 கோடியே 38 லட்சத்து 93 ஆயிரத்து 136 அசையா சொத்துகளும் என மொத்தம் ரூ.1 கோடியே 70 லட்சத்து 18 ஆயிரத்து 973 சொத்துகள் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
விஜயகாந்த் மனு தாக்கல் செய்த போது, தனது சொத்து விவரங்களையும் தாக்கல் செய்து இருந்தார். அதில் கூறப்பட்டு இருந்தாவது:-
vij
விஜயகாந்த் பெயரில் அசையும் சொத்தின் மதிப்பு ரூ.7 கோடியே 60 லட்சத்து 16 ஆயிரத்து 721-ம், அசையா சொத்தின் மதிப்பு ரூ.19 கோடியே 37 லட்சத்து 75 ஆயிரத்து 500-ம், மனைவி பிரேமலதா பெயரில் அசையும் சொத்தின் மதிப்பு ரூ.4 கோடியே 56 லட்சத்து 81 ஆயிரத்து 893, அசையா சொத்தின் மதிப்பு ரூ.17 கோடியே 42 லட்சத்து 76 ஆயிரத்து 600-ம், தங்கம் 1,410 கிராம் ஆகும்.
அவரை சார்ந்தவர் 1- அசையும் சொத்தின் மதிப்பு ரூ.87 லட்சத்து 11 ஆயிரத்து 212, அசையா சொத்து ரூ.1 கோடியே 97 லட்சத்து 22 ஆயிரம். சார்ந்தவர் 2- அசையும் சொத்து ரூ.1 கோடியே 75 லட்சத்து 2 ஆயிரத்து 425, தங்கம் 720 கிராம் ஆகும்.
விஜயகாந்தின் கடன் ரூ.7 கோடியே 61 லட்சத்து 4 ஆயிரத்து 45-ம், , பிரேமலதா பெயரில் ரூ.1 கோடியே 87 லட்சத்து 34 ஆயிரத்து 38-ம் உள்ளது. கையிருப்பாக விஜயகாந்திடம் ரூ.9 லட்சத்து 25 ஆயிரமும், பிரேமலதா பெயரில் ரூ.22 லட்சத்து 80 ஆயிரத்து 825-ம் உள்ளது. அவர்களை சார்ந்தவர்கள் 1-, சார்ந்தவர் 2 என்று தலா ரூ.50 ஆயிரம் உள்ளது. மேலும் பல்வேறு வழக்குகள் தொடர்பாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் காட்டுமன்னார்கோவில் (தனி) தொகுதியில் போட்டியிட நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
th
அவர் தாக்கல் செய்த மனுவோடு பிரமாண பத்திரமும் தாக்கல் செய்துள்ளார். அதில் தனது பெயரிலும், தனது தயார் பெயரிலும் உள்ள சொத்து மதிப்புகளை குறிப்பிட்டுள்ளார். அதன் விவரம் வருமாறு:-
தொல்.திருமாவளவன் தாக்கல் செய்த சொத்து பட்டியலில் சென்னை, அரியலூர், புதுடெல்லி உள்ளிட்ட 6 வங்கிகளில் ரூ.2 லட்சத்து 68 ஆயிரத்து 212 வைப்புத்தொகை இருப்பதாகவும், ரூ.4 லட்சத்து 58 ஆயிரத்து 728 முதலீடு செய்து இருப்பதாகவும், ரூ.2 லட்சத்துக்கு காப்பீடு செய்துள்ளதாகவும், ரூ.15 லட்சம் மதிப்பில் கார் உள்ளதாகவும் என மொத்தம் ரூ.39 லட்சத்து 78 ஆயிரத்து 940-க்கு அசையும் சொத்துகள் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் தனது பெயரில் ரூ.7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் நிலம், ரூ.18 லட்சத்து 27 ஆயிரத்து 800 மதிப்பில் வீடு ஒன்று இருப்பதாகவும், தனது தாயார் பெரியம்மாள் பெயரில் ரூ.7 லட்சத்து 95 ஆயிரம் மதிப்பில் நிலம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.