தூத்துக்குடி சட்ட மன்ற தொகுதியில் போட்டியிடும் பா.ஜனதா வேட்பாளரை ஆதரித்து மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுவதற்காக சில இடங்களுக்கு மட்டுமே பா.ஜனதா கட்சியினர் தேர்தல் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று இருந்தனர்.
ஆனால் உரிய அனுமதி பெறாமல் டூவிபுரம் 5–வது தெரு பகுதியில் பொன் ராதாகிருஷ்ணன் பிரச்சாரம் செய்துள்ளார் என பறக்கும் படை தாசில்தார் ராமசுப்பு மத்திய பாகம் போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜனதா வேட்பாளர், கவுன்சிலர் பிரபு உள்ளிட்டோர் மீது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.