வங்கிக் கடன் மோசடி வழக்கில் சிக்கி, இங்கிலாந்துக்ுக தப்பிய தொழிலதிபர் விஜய் மல்லையா அந்நாட்டு குடியுரிமை பெற்றுவிட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
முன்னதாக, அமலாக்கப் பிரிவினர் கோரிக்கைக்கு இணங்க விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டை தற்காலிகமாக முடக்கியது மத்திய வெளியுறவு அமைச்சகம் விளக்கம் கேட்டு அனுப்பிய நோட்டீஸுக்கு மல்லையா அளித்த பதில் திருப்திகரமாக இல்லாததால் ஜாமீனில் வெளிவரமுடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது மேலும், நிரந்தரமாக அவரது பாஸ்போர்ட்டை முடக்கியது மத்திய வெளியுறவு அமைச்சகம்.
இது குறித்து மத்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் தனது ட்விட்டர் பக்கத்தில், “ விஜய் மல்லையா சமர்ப்பித்த பதில்கள், அமலாக்கத் துறையினர் பகிர்ந்து கொண்ட தகவல்கள், மற்றும் ஜாமீனற்ற கைது வாரண்ட் ஆகியவற்றைப் பரிசீலித்து பாஸ்போர்ட் சட்டப் பிரிவு 10 (3), (சி) மற்றும் 19 (3) (எச்) ஆகிய பிரிவுகளின் கீழ் விஜய் மல்லையாவின் முடக்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.
இதற்கிடையே, விஜய்மல்லையாவுக்கு இங்கிலாந்து குடியுரிமை கிடைத்துவிட்டதாகவும், அந்நாட்டு வாக்காளர் பட்டியிலில் அவரது பெயர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாஸ்போர்ட் முடக்கப்பட்ட குற்றவாளிக்கு, இங்கிலாந்து அரசு எப்படி குடியுரிமை கொடுத்தது, இது குறித்து மத்திய பாஜக அரசின் நடவடிக்கை என்ன என்ற கேள்விகள் இப்போது எழுந்துள்ளன.
இதற்கிடையே இன்னொரு தகவலும் சொல்லப்படுகிறது. காமன்வெல்த் நாடுகளைச் சேர்நதவர்கள், இங்கிலாந்தில் தங்கினால் (குடியுரிமை அனுமதி வைத்திருப்பவர்) அவருக்கு இங்கிலாந்தில் வாக்குரிமை உண்டு. அதன் அடிப்படையில் விஜய்மல்லையா, வாக்குரிமை பெற்றிருக்கிறார்.