aathi11
வேலூர் மாவட்ட ஆட்சியராக நந்தகோபால் கடந்த 2014 பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு வேலூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றார். பாராளுமன்ற தேர்தலின்போது தீவிர அதிமுக தொண்டர் போல் செயல்பட்டார். இதனை அப்போது திமுக, பாமக போன்றகட்சிகள் எதிர்த்தன.
அதனால் அப்போது அவர் இடமாற்றம் செய்யப்பட்டார். தேர்தல் முடிவுக்கு பின் மீண்டும் அதே வேலூர் மாவட்ட ஆட்சியராக பொறுப்புக்கு வந்தார். இவர்ஆட்சியராக இருந்த காலத்தில் தான் வேலூர் பாலாற்றில் அதிகமாக மணல் சுரண்டல்நடந்தது. வாலாஜா, ராணிப்பேட்டை, காட்பாடி உட்பட பலயிடங்களில் மணல் குவாரி அமைக்கமக்களின் கருத்து கேட்பு என்கிற பெயரில் கூட்டம் ஏற்பாடு செய்து மக்கள் மணல்குவாரிக்கு அமோகமாக ஆதரவு தெரிவிப்பதாக அரசு விரும்பியபடி கருத்துக்களை தந்தார். அதுப்படி மணல் குவாரிகள் அமைக்கப்பட்டு மணல் சுரண்டல் நடைபெற்று வருகின்றன.
மணல் குவாரி அமைவதை எதிர்த்த களத்தூர் உட்பட சில கிராம மக்கள் மீதும், அமைப்புகள் மீது காவல்துறையை ஏவி பொய்யாக பல புகார்கள் பதிய காரணமாகஇருந்தார். அதிகாரத்தில் இருந்ததால் மக்களால் இவரை பெரிய அளவில் எதிர்க்கமுடியவில்லை.
இவருக்கு பின்னால் ஜெவின் அமைச்சரவையில் இரண்டாம் இடத்தில்இருந்து அமைச்சர் ஓ.பி.எஸ் ஆதரவு இவருக்கு பலமாகயிருந்தது. வேலூர் பாலாற்றில் சட்ட விரோதமாக மணல் எடுத்து விற்பனை செய்தது ஓ.பி.எஸ் உறவினர் என பரவலாககுற்றச்சாட்டு வைக்கப்பட்டது. எதற்கும் மாவட்ட ஆட்சியரான நந்தகோபால்கவலைப்படவில்லை.
இந்நிலையில் 2016 சட்டமன்ற தேர்தல் தொடங்கியது முதலே அதிமுகமாவட்ட செயலாளர் போல் செயல்பட்டு வந்தார். அதிமுக அரசின் தேர்தல் விதிமீறல்களை கண்டுக்கொள்ளவில்லை. இதுப்பற்றி திமுகவின் சட்டப்பிரிவு தேர்தல் ஆணையத்துக்கு புகார் தந்தது. அதேபோல் கடந்த வாரம் வேலூர் மாவட்ட பாமக கூட்டத்தில் மாவட்டஆட்சியரை கண்டித்து தீர்மானம் இயற்றப்பட்டன.
இந்நிலையில் 23ந்தேதி மாலை தேர்தல் ஆணையம் நந்தகோபாலை இடமாற்றம் செய்தது. இந்த அறிவிப்பை கேட்டதும் வாலாஜாவில் உள்ள பாலாறு பாதுகாப்புகுழுவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். அதேபோல் வேலூர், ராணிப்பேட்டை பகுதிகளிலும் அரசியல் சாரா இயக்கங்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். வழக்கமாக உயர் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டர் அரசு ஊழியர் சங்கங்கள் தான் சந்தோஷமடையும். ஆனால் இங்கு மாவட்ட ஆட்சியர் இடமாற்றத்தை வரவேற்று பொதுமக்கள்கொண்டாடும் அளவுக்கு “சிறப்பாக“ செயல்பட்டுள்ளார் மாவட்ட ஆட்சியர் நந்தகோபால்.
வேலூர் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக ராஜேந்திர ரத்னு நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று 24ந்தேதி பொறுப்பேற்கவுள்ளார்.