parliment_8
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் 2 கட்டமாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி முதற்கட்ட தொடர் கடந்த பிப்ரவரி மாதம் 23-ந்தேதி தொடங்கி மார்ச் 16-ந்தேதி வரை நடந்தது. இதில் ரெயில்வே மற்றும் பொதுபட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, அவற்றின் மீதான விவாதங்கள் நடந்தது.
மொத்தம் 16 அமர்வுகள் நடந்த இந்த தொடரில் பாராளுமன்றத்தில் 11 மசோதாக்களும், மேல்-சபையில் ஒரு மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டது. பாராளுமன்றத்தில் 9 மசோதாக்களும், மேல்-சபையில் 11 மசோதாக்களும் நிறைவேற்றப்பட்ட நிலையில், ரியல் எஸ்டேட் மசோதா, தேர்தல் சட்ட திருத்த மசோதா உள்ளிட்ட 10 மசோதாக்கள் இரு அவைகளிலும் நிறைவேறின.
இந்த நிலையில் 2-ம் கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை (திங்கட்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (மே) 13-ந்தேதி வரை நடக்கிறது. மொத்தம் 15 அமர்வுகள் நடைபெற உள்ள இந்த தொடரில் நிறைவேற்றுவதற்காக ஏராளமான மசோதாக்கள் நிலுவையில் உள்ளன.
குறிப்பாக நிதி மசோதா, சரக்கு மற்றும் சேவை வரி மசோதா, தொழிற்சாலைகள் மசோதா போன்ற முக்கியமான மசோதாக்களை இந்த தொடரில் நிறைவேற்ற மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.