இந்தியாவின் முதல் பகலிரவு டெஸ்ட் போட்டி நியுசிலாந்துடன் மோதவுள்ளது.
கடந்த வியாழனக்கிழமை அன்று, குறிப்பிட்ட சில பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில்  அனுபம் தாகூர் இந்த முக்கிய அறிவிப்பினை வெளியிட்டார்
DAYNIGHT TEST MATCH INDIA
பஞ்சுமிட்டாய் (பிங்க்) நிற பந்தைப் பயன்படுத்தி பகலிரவு டெஸ்ட் கிரிக்கெட் நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது. அருகிவரும் பார்வையாளர் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் இந்த முடிவினை பி.சி.சி.ஐ. எடுத்துள்ளதாக அதன் செயலாளர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். இவ்வருடத்தில் பிற்பாதியில் நியூசிலாந்து இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வரும்பொழுது இது அமல்படுத்தப் படுமென தெரிவித்தார்.
bcci_hd-1280x800
அதற்கு முன்னதாக, ஒத்திகை பார்ப்பதுபோல்,  துலீப் கோப்பை போட்டியை பகலிரவாக நடத்த பி.சி.சி.ஐ. உத்தேசித்து உள்ளது.
பகலிரவுப் போட்டிகளுக்கு பயன்படுத்தப் படும் குக்கபெர்ரா பந்துகள் இந்திய மைதானங்களில்  பகலிரவு ஆட்டங்களில் எவ்வாறு செயல்படுகின்றது என சோதிக்கும் முயற்சியாக துலீப் கோப்பை போட்டிகள் நடத்தப்படும் எனக் கூறினார்.
ANUPAM THAKUR
இதற்கான மைதானத்தை இன்னும் தேர்வு செய்யவில்லை எனினும் பல காரணிகளை நாங்கள் கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது என்றார் தாகூர்.
எனவெ முன்னணி வீர்ர்கள் அனைவரும் இந்தப் போட்டியில் விளையாட கேட்டுக்கொள்ளப் படுவார்கள். இந்த பயிற்சி அவர்களுக்கு டெஸ்ட் போட்டியில்  சிறப்பாக விளையாட உதவும். மேலும் அவர்களது அனுபவக் கருத்துக்கள் எங்களுக்கு முடிவெடுக்க உதவும். நாங்கள் பந்து தயாரிக்கும் நிறுவனமான எஸ்.ஜி. யிடம் பிங்க் பந்து தயாரிக்க கேட்டுக்கொள்வோம். ஆனால் அது குக்குபெர்ரா பந்தின் தரத்தில் இருக்கவேண்டும்.” என்றார் தாகூர்.