
சென்னை கிண்டியில் உள்ள கத்திப்பாரா மேம்பாலத்தின் வழியாக விமான நிலையம் நோக்கி இன்று பிற்பகல் ஒரு சொகுசு கார் சென்றுகொண்டிருந்தது. பாலத்தின் நடுவே கார் சென்றபோது காரில் திடீரென புகை கிளம்பியதால் பதற்றமடைந்த டிரைவர் காரை சாலையின் ஓரமாக நிறுத்தினார். அதற்குள் கார் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
இதைக் கண்ட டிரைவர் காரை விட்டு இறங்கி உதவிக்கு அவ்வழியாக சென்றவர்களை அழைத்தார். அதற்குள் காருக்குள் இருந்த 5 பெண்களை அங்கிருந்தவர்கள் பத்திரமாக வெளியேற்றினர்.
தீ விபத்து தொடர்பான தகவல் அறிந்ததும் விரைந்து வந்த தீயணைப்பு படையினர் காரில் எரிந்த தீயை முழுமையாக அணைத்தனர். இதனால் கத்திப்பாரா சாலையில் திடீரென பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரம் அவ்வழியாக செல்லும் ஒருவழிப்பாதை போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது. விபத்துக்கான காரணம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Patrikai.com official YouTube Channel