image

வாஷிங்டன்:

மிகவும் அரிதான சந்திர கிரகணம் ஒன்று இன்று ஏற்படவுள்ளதாக வானியல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளார்கள்.

இது குறித்து அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாஸா, “30 வருடங்களுக்கு பிறகு 100 சதவிகித பிரகாசமான சந்திர கிரகணம் இன்று ஏற்பட இருக்கிறது.   மற்ற நாட்களைவிட இன்று 17 சதவிகதம் பெரிதாக சந்திரன் தென்படும்” என்று தெரிவித்துள்ளது.

இதனால் நாளை கடல் அலையின் மட்டம் சற்று உயரக் கூடும் எனவும் ஆனால் அது பற்றி அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் நாஸா தெரிவித்திருக்கிறது.

“இன்றைய சந்திரகிரகணத்தின் போது நிலாவில் பெண் உருவம் தோன்றும். அதைப் பார்த்தால் நல்லது” என்று சிலர் சமூகவலைதளங்களில் செய்தி பரபப்பி வருகிறார்கள்.

“நிலாவில் பாட்டி வடை சுட்ட கதையை கொஞ்சம் திருப்பிப்போட்டு சிலர் இப்படி ஓர் வதந்தியை கிளப்பி வருகிறார்கள். அதை நம்ப வேண்டாம்” என்று இந்தி வானவியல் வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.