nitin-gadkari
’தாமரை வெல்லட்டும், தமிழகம் மலரட்டும்’ என்ற தலைப்பில் பாஜக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. மத்திய அமைச்சர் நிதின்கட்காரி தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். தேர்தல் அறிக்கையை தேர்தல் அறிக்கையை மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார்.
பாஜக தேர்தல் அறிக்கையின் 25 முக்கிய அம்சங்கள்
1. குடும்பத்திற்கு 20 லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் இலவசமாக வழங்கப்படும்
2. கோயில்களில் கட்டண தரிசனம் ஒழிக்கப்படும்; ஆக்கிரமிப்பு கோயில் சொத்துகள் மீட்கப்படும்
3. சத்தீஸ்கார் மாநிலத்தில் உள்ளது போல ஸ்மார்ட் ரேசன் கார்டு வழங்கப்படும்
4. வெளிநாடு வாழ் தமிழர்களுடன் தொடர்பை ஏற்படுத்த தனியாக அமைப்பு ஏற்படுத்தப்படும்
5. மாவட்டந்தோறும் பல்நோக்கு இலவசர மருத்துவமனைகள் அமைக்கப்படும்
6. இயற்கை விவசாயத்திற்கு தனி கொள்கை உருவாக்கப்படும்
7. மஞ்சள் குவிண்டாலுக்கு ரூ15 ஆயிரம் விலை நிர்ணயம்
8. மதுவிலக்கு
9. கரும்பு டன்னுக்கு 4,500; நெல்லூக்கு 2,500 என விலை நிர்ணயம் செய்யப்படும்
10. லோக் அயுக்தா கொண்டுவரப்படும்
11. மின்மிகை மாநிலமாக தமிழகம் மாற்றப்படும்
12. சிபிஎஸ்.இ.க்கு நிகராக அரசுப்பள்ளிகளில் கல்வி முறை உருவாக்கப்படும்
13. விளையாட்டுப்பல்கலைக்கழகம், அருந்ததியர் நலவாரியம் அமைக்கப்படும்
14. ஆழ்கடல் மீன்பிடிப்பு ஊக்குவிக்கப்படும்; மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்
15. பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் ஆண்டுக்கு 5 ஆயிரம் ஊக்கத்தொகை தரப்படும்
16. ஆழ்கடல் மீன்பிடிப்பு ஊக்குவிக்கப்படும்; மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்
17. பரம்பரிய பசு இனங்கள் பாதுகாக்கப்படும்
18. காவல் நிலையங்கள் ஆளுங்கட்சி பிடியில் இருந்து விடுவிக்கப்படும்
19. காவல் விசாரணையில் அரசியல் தலையீடு அகற்றப்படும்
20. மத்திய அரசின் ஆயுஷ் திட்டம் மாநிலம் முழுவதும் விஸ்தரிக்கப்படும்
21. வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்கும் பெண்களின் திருமணத்திற்காக தாலிக்கு 8 கிராம் இலவச தங்கம் வழங்கப்படும்
22. இருபத்து நான்கு மணி நேரம் செயல்படும் பிரத்யேக பெண்கள் நல மையங்கள் உருவாக்கப்படும்
23. முக்கிய தொழில் மையங்களில் பணிபுரியும் பெண்களுக்கு தங்கும் விடுதிகள் அமைக்கப்படும்
24. ஆன்மீக சுற்றுலா திட்டம் உருவாக்கப்படும்
25. கட்டாய மதமாற்ற தடை சட்டம் கொண்டு வரப்படும்