
இந்து முன்னணி தலைவர் ராம.கோபாலன் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது குறித்து, ‘’மதமாற்ற தடைச் சட்டம், பசுவதை தடுப்புச் சட்டம், இந்து கோவில்களை, தனியார் அறக்கட்டளை நிர்வாகத்திடம் ஒப்படைப்பது போன்ற கோரிக்கைகளை ஏற்கும் கட்சிகளுக்கு, இந்து முன்னணி ஆதரவு அளிக்கும்’’என்று கூறியுள்ளார்.
அவர் மேலும், ‘’பா.ஜ., இந்த கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டுள்ளது. எனவே, அக்கட்சியை ஆதரிப்போம். முதல்வர் ஜெயலலிதா, படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வரப்படும் என்று கூறுவதில் இருந்தே, அவருக்கு மதுவிலக்கில் அக்கறை இல்லை என்பது தெரிய வருகிறது. இப்போது, எல்லா கட்சியினரும் மதுவிலக்கு என்கிறார்கள். இது, தேர்தல் நேரத்தில் நடத்தப்படும் நாடகம்’’என்று தெரிவித்துள்ளார்.
–
Patrikai.com official YouTube Channel