
திண்டுக்கல் மாவட்டத்தில் ஆத்தூர், நத்தம், நிலக்கோட்டை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி வேடசந்தூர் ஆகிய 7 தொகுதிகள் உள்ளன. இந்த 7 தொகுதியில் 6ல் அதிமுகவுடன் திமுக நேருக்கு நேர் போட்டியிடுகிறது. வேடசந்தூரில் மட்டும் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
வேடசந்தூர் சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் A.R. சிவசக்திவேல் கவுண்டர் ( வயது 69). இவருக்கு S.ராஜம்மாள் என்ற மனைவியும், S.செல்லமுத்து S.ராமசாமி S.சக்திவேல் என்ற மகன்களும், பரமேஸ்வரி என்ற மகளூம் உள்ளனர். மூணூர் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த இவர், காங்கிரசில் மாநில வர்த்தக அணி செயளாலராக 10 ஆண்டு பதவி வகித்தார். தற்போது திண்டுக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பதவியில் உள்ளார்.
Patrikai.com official YouTube Channel