தெலங்கானாவில் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தால் இதுவரை 35 பேர் மரணமடைந்துள்ளனர். வெயில் சார்ந்தப் பிரச்சனைகளால் மேலும் பலர் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
தெலங்கானா, கரிம் நகரைச் சேர்ந்த ஒருப் பெண்மணி தரையில் ஆம்லெட் போட முடிவு செய்து வெற்றிகரமாக ஆம்லெட் தயாரித்துவிட்டார். அந்தப் புகைபடம் சமூகவலைத்தளங்களில் அதிகமாகப் பகிரப்பட்டுவருகின்றது.
ஒருப்பக்கம் இது சுவாரஸ்யமான செய்தியாக பகிரப்பட்டாலும், உலக வெப்பமயமாதலின் ஒரு உதாரணமாய்த் இது திகழ்கிறது.
ஹைதராபாத் வானிலை மையம், இன்னும் இரண்டு நாட்களுக்கு வெயில் அலை அடிக்கும் எனவும், மக்கள் நடமாட்டத்தினை தவிர்க்கும் படியும் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த கோடையில் 40- 45 டிகிரி வரை வெப்பம் அதிகரிக்கும் எனத் தெரிவித்துள்ளது. இது ஆந்திர மற்றும் தெலங்கானா அரசுகளை முன்கூட்டியே கோடைவிடுமுறையை அறிவிக்க நிர்பந்தித்துவுள்ளது.