பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில், ஆடம்பரத் திருமணங்களைக் கட்டுப்படுத்தும் விதமாக, கடந்த வியாழக்கிழமையன்று, சட்டசபையில் ஒருமனதாக, திருமணக் கட்டுப்பாடுச் சட்டம் இயற்றப் பட்டுள்ளது.
இந்தச் சட்டத்தினை, தீவிரமாக நடைமுறைப்படுத்த முதலைச்சர் ஷப்பாஸ் ஷரிஃப் உறுதியளித்துள்ளார்.
இந்தச் சட்டத்தினை மீறுபவர்களுக்கு 20 லட்சம் அபராதம் மற்றும் ஒரு மாத சிறைத் தண்டனையும் கிடைக்கும்.
இந்தச் சட்டம் :எளிமையையும், தேவையற்ற வீண்ஜம்பத்தினையும் தவிர்க்க உதவும் என முதலமைச்சர் நம்பிக்கைத் தெரிவித்தார்.
பஞ்சாபி திருமணங்களில் இனி வரதட்சணையை காட்சிக்கு வைக்கக் கூடாது, வாணவேடிக்கைக் கூடவே கூடாது, இரவு 10 மணிக்குள் திருமண நிகழ்ச்சி முடிக்கப்படவேண்டும், விருந்தில் ஒரு- கறி வகை மட்டுமே பரிமாறவேண்டும், அண்டை வீட்டாரைத் தொந்தரவு செய்யக் கூடாது என அரசால் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.