டில்லி: சவுதி அரேபியாவுக்கு வேலைக்கு செல்லும் இந்தியர்கள் தங்களின் படும் துயரங்களை விவரிக்கும் புத்தகம் ஒன்று வெளியாகியுள்ளது.
சவுதி அரேபியாவில் வேலை செய்யும் இந்தியர்கள் அவர்களின் முதலாளிகளால் படும் இன்னல்கள் குறித்து அடிக்கடி செய்திகள் வெளியாகி வருகின்றன.
ஜார்க்கண்டை சேர்ந்த 25 வயது பெண்ணின் கணவர் சவுதியில் வேலைக்கு சென்ற இடத்தில் அவரது முதலாளியால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். அவரது உடலை பார்க்க அந்த பெண் ஓராண்டு காலமாக காத்திருக்கிறார்.
சவுதியில் இந்தியர்கள் படும் அவதி குறித்து பத்திரிக்கையாளராக இருந்து எழுத்தாளரான ஜாய் சி. ரபேல் புத்தம் ஒன்றை எழுதியுள்ளார். Sour and Sweet: Expat Stories from Arabia என்ற தலைப்பிலான அந்த புத்தகத்தில் சவுதியில் அரபிகளால் இந்திய தொழிலாளர்கள் படும் துயரங்கள் விரிவாக எழுதப்பட்டுள்ளது. சவுதி அரேபியா, அமீரகம், ஓமன், குவைத்திற்கு வேலைக்கு சென்ற இடத்தில் இந்தியர்கள் படும் தயர்களையும் அந்த புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ளது.