IPL 2016 : மும்பை அணி முதல் வெற்றி
நேற்று கொல்கத்தாவில் IPL 2016 ஐந்தாவது போட்டி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கவுதம் கம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இடையில் நடைபெற்றது.
டாஸ் வென்ற மும்பை கொல்கத்தாவை பேட்டிங் செய்ய அழைத்தது. உத்தப்பா அதிக ரன்கள் எடுக்காமல் அவுட் அன்னார். பின்னர் பேட்டிங் செய்யாத பாண்டே கம்பீர் ஜோடி மளமளவென 121 ரன்கள் 13 ஓவர்களில் எட்டியது. ஹர்பஜன் பந்து வீச்சில் பாண்டே தனது விக்கெட் இழந்தார். பார்டிவ் படேலின் அற்புதமான கேட்சில் கம்பீர் 64 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். மெக்லெனஹான் மற்றும் பும்ரவின் கடைசி ஓவர்கள் கோல்கட்டா பைட்ஸ்மேன்கள் ரன் எடுக்க தெனறினார்கள் இதன் காரணமாக கோல்கட்டா 20 ஓவரில் 187/5 எடுத்தது.
PhotoGrid_1460594637569
கோல்கட்டா மைதானம் ரோஹித் ஷர்மாவிக்கு மிகவும் ரசியானது என்பதை இந்த ஆட்டத்தில் இருபணமானது. பொறுப்புடன் தங்கள் இன்னிங்ஸ்ய தொடங்கிய மும்பை அணி ஆறாவது ஓவரில் படேல் ரன் அவுட் செய்யப்பட்டார். பின்னர் களம் இறங்கிய மெக்லெனஹான் மற்றும் ஜோஸ் பட்லர் ரோஹித் ஷர்மாவுடன் கூட்டு சேர்ந்து மும்பை அணி 19.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 188 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. கேப்டன் ரோஹித் சர்மா 84 ரன்கள், மெக்லெனஹான் 8 பந்துகளில் 20 ரன் மற்றும் ஜோஸ் பட்லர் 41 ரன்கள் மும்பை அணி வெற்றிபெற உதவினர்.
மும்பை இந்தியன்ஸ் 188 /4 (ரோஹித் 84*, பட்லர் 41) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 187 /5 ( கவுதம் கம்பீர் 64, மனிஷ் பாண்டே 52) மும்பை 6 விக்கெட் வித்தியாசத்தில் போட்டியை வென்றது.