
சென்னை: திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் திருவாரூரில் போட்டியிடுகிறார். ஏப்ரல் 25ம் தேதி அவர் தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்யப்போவதாக திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
திமுக தலைவர் கருணாநிதியின் பரப்புரைத் திட்டத்தையும் திமுக தலைமை இன்று அறிவித்தது. அதன்படி ஏப்ரல் 23ம் தேதி அவர் சென்னை சைதாப்பேட்டையில் தனது பரப்புரையைத் தொடங்கி, மே 12ம் தேதி திருவாரூரில் நிறைவு செய்கிறார்.
இதுதொடர்பாக திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கை:
ஏப்ரல் 23ம் தேதி மாலை 4 மணிக்கு சைதையில் நடைபெறும் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் கருணாநிதி பேசுகிறார்.
அதன் பின்னர் அவரது பிரசாரத் திட்டம்: மாலை 6 மணி – மரக்காணம் (வேன் பிரசாரம்) 7.30 – புதுச்சேரி பொதுக்கூட்டம். (இரவு புதுச்சேரியில் தங்கல்) ஏப்ரல் 24 – மாலை 4 – கடலூர் பொதுக்கூட்டம் 5 மணி – சிதம்பரம் (வேன்) 6.30 மணி – சீர்காழி (வேன்) இரவு 7.30 – மயிலாடுதுறை பொதுக்கூட்டம் (தங்கல் திருவாரூர்)
Patrikai.com official YouTube Channel