சிறந்த ஆசிரியர்களை என்.ஐ.டி ஸ்ரீநகருக்கு குறைந்த காலத்திற்கு மத்திய அரசு நியமிக்கிறது !
என்.ஐ.டி-ஸ்ரீநகரில் ஆசிரியர் துன்புறுத்துகின்றனர் என்றும் எனவே தங்களுக்கு உள்ளூர்காரர்கள் அல்லாத ஊழியர்களை நியமிக்க வேண்டும் எனக் கோரியும் மாணவர்கள் போராடி வருகின்றனர்.
கொந்தளிக்கும் மாணவர்களை சமாதானப்படுத்தும் ஒரு முயற்சியாக, மத்திய அரசு ஐஐடி மற்றும் என்.ஐ.டி.களிலிருந்து அதனுடைய சிறந்த ஆசிரியர்களை என்.ஐ.டி-ஸ்ரீநகருக்கு குறுகிய காலத்திற்கு நியமிக்க வுள்ளதாக தகவல்கள் வெளியாகிஉள்ளன.
31 என்.ஐ.டி. மற்றும் 18 ஐ.ஐ.டி. களிலிருந்தும் மிகத் திறமையான 50 ஆசிரிய உறுப்பினர்கள் கொண்ட பட்டியல் ஒன்றை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் நிர்ணயித்துள்ளது. இவற்றுள் சிலரை விரைவில் ஒரு செமஸ்டர் அல்லது ஒரு பாடத்தை கற்பிக்க என்.ஐ.டி-ஸ்ரீநகருக்கு அனுப்பலாம். அங்கிருக்கும் மாணவர்கள் மத்தியில், அவர்களது கல்வி அலுவலர் மற்றும் ஆசிரியர்களுக்கு நல்ல (போதுமான) அறிவு இல்லை என்ற ஒரு உணர்வு இருக்கிறது. அரசாங்கம் அவர்களின் பிரச்சனைகளை கண்டுகொள்ளாமல் இல்லை என்ற எண்ணத்தை உடைத்தால் அவர்களுக்கு நம்பிக்கையை உருவாக்க உதவ முடியும்”, என்று அடையாளம் காட்டிக்கொள்ள விரும்பாத ஒரு நபர் கூறினார்.
உலகக் கோப்பை T20 அரை இறுதிப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளிடம் இந்தியா இழந்ததிலிருந்து என்.ஐ.டி வளாகத்தில் காஷ்மீர் மாணவர்களுக்கும் வெளிமாநில மாணவர்களுக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. வளாகத்தில் வாழ்க்கை இயல்பு நிலைக்கு திரும்பத் தொடங்கிய போது, செவ்வாய்க்கிழமை அன்று ஒரு சில மாணவர்கள் வளாகத்தைவிட்டு வெளியேறும் போது போலீஸாரால் நிறுத்தப்பட்டதால் அவர்களுடன் மீண்டும் மோதல் ஏற்பட்டது.
மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி அவர்கள் இரண்டு உறுப்பினர் கொண்ட குழுவை என்.ஐ.டி க்கு அனுப்பி மாணவர்களுக்கு மத்தியில் “நம்பிக்கையை எழுப்பி” தேர்வுகள் “பாதுகாப்பான சூழலில்” நடைபெறுமாறு உறுதி செய்துள்ளார். இந்த குழு, புதன்கிழமை தேர்வுகள் முடியும் வரை , வளாகத்தில் இருக்கும் என்றார். தேர்வுகள் ஏப்ரல் 11 முதல் 14 வரை நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
கொந்தளித்துக் கொ ண்டிருக்கும் மாணவர்கள் மனித வளத்துறை அமைச்சகக் குழு மற்றும் நிறுவனத்தின் இயக்குனர் ஆகியோரிடம் கோரிக்கைப் பட்டியலை முன்னிறுத்தியுள்ளனர். அவர்கள், வளாகத்தில் மத்திய படைகளின் நிரந்தர பயன்படுத்தல், பிரதான வாயிலில் தேசிய கொடியேற்றம் மற்றும் 50 சதவீத ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வெளியூர்காரர்களாக இருக்க வேண்டுமென, கோரிக்கைகளை வைத்துள்ளனர்.
சில மாணவர்கள் பாதுகாப்பற்ற உணர்வினாலும் ஆசிரியர்களிடமிருந்து குறைவான மதிப்பெண்கள் என்கிற பதிலடியினாலும் வேறு மாநில என்.ஐ.டி க்கு மாற்றப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். தேர்வுத்தாளை மோசமாக மதிப்பீடு செய்யும் அச்சத்தை போக்கும் வகையில் அரசாங்கமும் நிர்வாகத்தின் இயக்குனரும் வெளி தேர்வாளரைக் கொண்டு தேர்வுத்தாளை மதிப்பீடு செய்யும் யோசனைக்கு செவிசாய்த்துள்ளனர். எனினும், மற்ற கோரிக்கைகளை நிராகரித்துள்ளனர் அதுவும் குறிப்பாக வெளி மாநில என்.ஐ.டி வளாகங்களுக்கு உள்ளூர் அல்லாத மாணவர்களை மாற்றும் கோரிக்கையை நிராகரித்தது. “வேறு என்.ஐ.டி.க்கு மாணவர்களை மாற்றும் கேள்விக்கு இடமே இல்லை. என்.ஐ.டி களுக்கான சேர்க்கை தகுதி அடிப்படையில் உள்ளது அதை ஒருவருடைய விருப்பத்திற்கு மாற்ற முடியாது. மேலும் இது போன்ற மாற்றங்களைப் பற்றி எந்தவொரு சட்டமும் என்.ஐ.டி விதிமுறைகளில் இருப்பதாக தெரியவில்லை.” என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
இன்னும் பாதுகாப்பில்லாமல் உணரும் மாணவர்கள் வீட்டுக்கு சென்று திரும்பி வந்து வேறொரு நாள் பரீட்சை எழுதலாம் என அமைச்சக அதிகாரிகள் கூறினர்.
“எங்கள் மதிப்பீட்டின் படி, கிட்டத்தட்ட 2,000 மாணவர்கள் அட்டவணையின் படி தேர்வு நடத்தப்படும் வேண்டும் என்று எண்ணுகின்றனர். எனவே, தேர்வை ஒத்திவைக்கும் கேள்விக்கே இடமில்லை ” என்றும் கூறினார்.