
இ – சேவை மையங்களில் மாணவர்களுக்கு சாதி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், வருமான சான்றிதழ் அனைத்தும் இங்கு அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் எல்காட் நிறுவனத்தின் ஓப்பந்ததாரர்களாக பணியாற்றி வந்தனர்
இவர்களுக்கு கடந்த ஆறு மாதமாக சரிவர ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் ஐம்பதுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியைவிட்டு விலகிவிட்டார்கள்.
சென்னை அசோக் பில்லர் அருகில் உள்ள இ-சேவை மையம் மூடப்பட்டுள்ளது. அயனவாரத்தில் உள்ள இ-சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் எழும்பூர், மாம்பலம், ஆகிய இடங்களில் இந்த சேவை நிறுத்தப்படும் அபாயம் உள்ளது. பெரம்பூர் தாசில்தார் அலுவலகத்தில் கடந்த ஆறுமாதங்களாக ஊதியம் இல்லாமல் ஊழியர்கள் பணி புரிந்துவருகிறார்கள். .
இவர்களது அவலநிலை ஒருபுறம். இன்னொரு புறம் வரும் ஜூன் மாதம் பெரும் நெருக்கடி ஏற்படும். அப்போது பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு சாதிசான்றிதழ், வருமான சான்றிதழ் மற்றும் இருப்பிட சான்றிதழ் பெற வேண்டும். அப்போது இ சேவை மையங்கள் இல்லை என்றால் பெரும் பாதிப்பு ஏற்படும்.
ஆகவே உடனடியாக இ சேவை ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
Patrikai.com official YouTube Channel