premlatha
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை தொடர்ந்து அவதூறாக பேசி வருவதாக புகார் கூறி சேலத்தில் பிரேமலதா தங்கியிருந்த ஓட்டலை முற்றுகையிட்டு அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த சம்பவம் குறித்து பிரேமலதா விஜயகாந்த் அளித்த விளக்கம்-
“தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீரழிந்து விட்டது. கொலை, கொள்ளை, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை தான் உள்ளது.
சேலத்தில் நான் தங்கி இருந்த விடுதி முன்பு அ.தி.மு.க.வினர் 10 பேர் வந்து விளம்பரத்திற்காக கோஷம் போட்டதை போலீசார் தடுக்காமல் வேடிக்கை பார்த்தனர்.
தமிழகத்தை பொறுத்த வரை இருக்கிற ஆட்சியாளர்களும், போலீசாரும் ஆளும் கட்சிக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகின்றனர். ஆனால் தேர்தலை நடுநிலையோடு நடத்த தமிழக தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையரிடம் புகார் செய்வோம்.
ஜெயலலிதா பற்றி அவதூறாக பேசவில்லை. மாறாக சொத்து குவிப்பு வழக்கு பற்றி தான் பேசி வருகிறேன். ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கு குறித்து பேசுவது அவதூறு ஆகாது.
தமிழகத்தில் தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்படவில்லை”.