சென்ற வாரம் ஓய்வுப் பெற்ற ஒரு கலைக் கல்லூரி முதல்வருக்கு , அவரது கடைசி வேலை நாளில், கல்லூரி வளாகத்திற்குள் கல்லறை வைத்து அவமானப் படுத்திய செயல் கேரளாவில் உள்ள ஒருக் கல்லூரியில் அரங்கேறியது.
இதனை ABVP மாணவர்களே செய்து விட்டு, அந்த முதல்வருக்கு எதிராக அறப் போராட்டங்களில் ஈடுப் பட்ட SFI மாணவர் சங்கத்தினர் மீது வீண்பழி போடப் படுவதாக SFI பாலக்காடு மாவட்டச் செயலாளர் ஜெயதேவன் கூறினார். அவர் ” SFI இது போன்ற பழித் செயல்களில் ஒருபோதும் ஈடு படாது. இந்தியா முழுவதும், இது போன்றச் செயல்களுக்கு பிரசித்துப் பெற்றவர்கள் ABVP தான். எனினும் இந்தச் செயலை யார் செய்திருந்தாலும் SFI வன்மையாகக் கண்டிக்கின்றோம்” என்றார்.
ABVP மாநிலச் இணைச்செயலாளர் அருண் குமார், “இதனைச் செய்தது SFI மாணவர் சங்கத்தினர். இது அனைவருக்கும் தெரியும். திங்கட்கிழமையன்று SFI யைக் கண்டித்து போராட்டம் நடத்தப் படும்” எனத் தெரிவித்தார்.
ஓய்வுப் பெற்ற கல்லூரி முதல்வர் சரசு, ” இதுகுறித்து போலிஸில் புகார் கொடுக்கப் பட்டுள்ளது. அவர்கள் உண்மையைக் கண்டறிவார்கள். குற்றவாளிகள் மீது சட்டப் படி உரிய நடவடிக்கை எடுப்பேன்” எனக் கூறினார்.
மூலம்: தி நியூஸ் மினுட் வலைத்தளம்.