நடைபெறவிருக்கும் தமிழகத் தேர்தலில் அதிமுக 130 இடங்களைப் பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என டைம்ஸ் நவ் தொலைகாட்சியின் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் மே மாதம் 16 ஆம் தேதி நடைபெறுகிறது. இதையடுத்து தமிழகத்தில் யார் ஆட்சியை கைப்பற்றுவார்கள் என்பது குறித்து கருத்துக் கணிப்பை டைம்ஸ் நவ் தொலைகாட்சி இன்று வெளியிட்டது.
அதில், ஆளும் அதிமுக கட்சி 39 சதவீத வாக்குகளைப் பெற்று 130 இடங்களை கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதான எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்ற கழகம் 32 சதவீத வாக்குகளைப் பெற்று 70 இடங்களையும், பிற கட்சியினர் 34 இடங்களையும் கைப்பற்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெறும் 4 சதவீத வாக்குகளை பெறும் பாரதீய ஜனதா கட்சிக்கு ஒரு இடமும் கூட கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.