kuru
செஞ்சி சட்ட மன்ற தொகுதி கெங்கவரம் கிராமத்தில் பாமக பொது கூட்டம் நடந்தது. இக் கூட்டத்தில்
காடுவெட்டி குரு எம்.எல்.ஏ. பேசியதாவது:- “பா.ம.க. ஆட்சிக்கு வந்தால் சாராயத்தை ஒழிப்போம், இலவச கல்வி, விவசாய திட்டங்கள், தடை இல்லாத மின்சாரம், வேலைவாய்ப்பு, தொழிற்சாலை உருவாக்குவோம் என அன்புமணி உறுதி அளித்துள்ளார். ஜெயலலிதா சாதனை சொல்லி ஜெயிக்கமுடியாது. ஜெயலலிதாவுக்கு தோல்வி பயம் வந்து விட்டது. இதனால் பணத்தையே நம்பி உள்ளார்.
அ.தி.மு.க.வுக்கு ஓட்டு போட்டால் ரேஷன் கடைகளில் சாராயம் வைத்து விற்பனை செய்வார்கள், வீட்டுக்கு ஒரு குடிகாரர்களால் மாதம் ரூ.3 ஆயிரம், ஒரு வருடத்திற்கு 36 ஆயிரம், 5 ஆண்டுக்கு ரூ.1.80 லட்சம் என குடிக்கிறார்கள். விசாயிகளில் 80 சதவீதம் பேர் கடன் வாங்கி வட்டி கூட கட்ட முடியாத நிலையில் உள்ளனர். நாம் வாழ வேண்டும் என்றால் நாம் ஆள வேண்டும். ”